
இது வரட்சியான பிரதேசங்களில் அதிக அளவில் வளர்கின்ற ஒரு சிறிய செடி.தும்பை இலையைப் போன்ற இலையுடன் நீல நிறத்தில் பூக்கும். ரயில் தண்டவாளங்களில் கொட்டப்பட்டுள்ள கற்களின் இடையே இவை வளர்ந்திருக்கும். இதனை அபராசி என்றும் கூறுவர். விஷ்ணுகிரந்தி இலையை கைப்பிடியளவு சட்டியிலிட்டு அடுப்பில் வைத்து வதக்கி,ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியளவுக்கு காய்ச்சி காலை மாலை கொடுத்துவர வயிற்றுப் போக்கு நின்றுவிடும். கைப்பிடியளவு விஷ்ணுகிரந்தியுடன், வெள்ளைப்பூண்டு, சீரகம்,சேர்த்து அரைத்து கொடுத்துவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.இளமை துள்ள வீரியத்தையும் வாரி வழங்கும்.

