-டாக்டர் ஆர்.கே.ஆனந்த், குழந்தை நல மருத்துவர்.

மது வாழ்வின் உயிர்நாடியே அன்புதான்.

தங்களுடைய சந்ததிகள் தங்களுக்கு நற்பெயர் தேடித் தருவார்கள் அல்லது முதுமையில் தங்களைப் பாதுகாப்பார்கள் என்கிற எதிர்பார்ப்புடன் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துவார்கள்.

அவை எதுவும் நிகழாதபோது தாங்கள் தோற்றுவிட்டதாக, ஏமாற்றப்பட்டதாக, வஞ்சிக்கப்பட்டதாக வருந்துவார்கள்.

வழக்கத்துக்கு மீறி குழந்தையிடம் தான் அன்பு செலுத்தியதாகவும், அப்படியிருந்தும் குழந்தை தன் கடமையை மறந்துவிட்டதாகவும், எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறி விட்டதாகவும் பெற்றோர்கள் மருகுவார்கள். ஆனால்,அன்பு என்பது வியாபார ஒப்பந்தம் போன்றது அன்று!

ஒரு பெற்றோராக,நமது குழந்தைக்கு நிபந்தனையற்ற, எதிர்பார்ப்புகள் அற்ற பரிபூரண அன்பை வழங்க வேண்டியது நமது கடமை.அப்படியான அன்புச் சூழலில்தான் குழந்தை பாதுகாப்பாக உணரும். எப்போதெல்லாம் தனது சந்தோஷங்களையும், இன்னல்களையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறதோ, அப்போதெல்லாம் அது தன் பெற்றோரின் அன்புக் கரங்களுக்குள் ஓடி வந்து அடைக்கலமாகும்.

அப்படியான பெற்றோர்கள், தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப குழந்தை இல்லையென்றாலும் அதிகம் உடைந்துபோக மாட்டார்கள்.

அப்படியான மனோபாவத்தை வளர்த்துக் கொண்டவர்கள், தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப குழந்தை இல்லை என்று தெரிகிறபோது,அது பேசாத மொழியையும் அதிகம் கவனிக்கத் தொடங்குவார்கள்.

அன்பு வியாபாரம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எப்போதும் நம்மால் முடிந்த உதவிகளை குழந்தைகளுக்குச் செய்ய வேண்டும். அவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக, அன்பு மிக்கவர்களாக நிச்சயம் வளர்வார்கள்.

எந்த சூழ்நிலையிலும் குழந்தைகள் நமக்கு எதுவும் செய்யவில்லை என்று வருந்த வேண்டாம்.அன்பு வியாபாரம் அல்ல.!

– ஹெல்த் அண்ட் பியூட்டி (Read Health and beauty)