
சொர்க்கத்தை வாணத்தில் தேட வேண்டாம்.அது பூமியில் நம் குடும்பத்தில் இருக்கிறது… என்பார்கள்!
ஆயிரம் விடுமுறைகள் வந்தாலும்… அவர் அலுவலகத்திற்கு விடுமுறை இல்லை.அது தான் அம்மாவின் சமையல் அறை… என்று சுட்டிக் காட்டுகிறது ஒரு கவிதை!.
தான் காணாத உலகத்தை தன் பிள்ளைகள் காண வேண்டும் என்று தோளில் சுமக்கும் உயிர்…அப்பா!.
குடும்பம் என்பது ஒன்றிணைந்து வாழும் ஒரு சமூக வாழ்க்கையாகும்.
இதில் கணவன்,மனைவி,பெற்றோர்கள், குழந்தைகள்,உடன் பிறப்புகள் போன்றவர்கள் அடங்குவர்.இந்த உலகத்தில் மிகச் சிறந்த அமைப்பு குடும்பம் ஆகும்.
குடும்பம் ஒரு கோயில்:
உங்கள் குடும்பம் சிறியதாக இருக்கலாம்,
கூட்டுக்குடும்பமாக இருக்கலாம், பெரியதாக இருக்கலாம்.எதுவாக இருந்தாலும் புன்னகையுடன் குடும்பத்தைப் போற்றுங்கள்.
நம் ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது மூட் மாறும் என்பதை நினைவில் வையுங்கள்.உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்து, மற்றவர்களின் மனம் கோணாமல் மென்மையாகவும், பாந்தமாகவும் வெளிப்படுத்துங்கள்.
அன்பும், விட்டுக்கொடுப்பதும் உள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்குங்கள். மற்றவர்களுடன் நீங்கள் வளர்வதற்கும், குடும்பத்தினர் வளர்வதற்கும் தேவையான எல்லா உதவிகளையும் செய்யுங்கள்.
வயிறு வலிக்கச் சிரித்து,அன்பு தோய்ந்த குடும்பத்தில் வாழ்வது, வாழ்க்கையை கஷ்டமில்லாமல் விளையாட்டாக வாழ்வதாகும்.
சொர்க்கம் வேறு எங்கும் இல்லை… குடும்பத்தில் தான் இருக்கிறது.போற்றி, பாராட்டி,வாழ்த்தி,கொண்டாடி மகிழுங்கள்.
ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் வாழ்க்கை ஒரு கொடை தான்!.
கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் வாழ்தல் ஒரு வரம்தான்!.
அதை இன்பமாகவும் கொண்டாட்டமாகவும் வாழலாமே!
-குணா.
– ஹெல்த் அண்ட் பியூட்டி (Read Health and beauty)

