
இந்த கேள்விக்கு சுவாரசியமான பதில்கள் உள்ளன. சுருக்கமாக சொல்வதென்றால் நம்மோடு கலப்பதற்கு முன் வரை உணவுக்கு உயிர் உண்டு. நம்மோடு கலந்த பிறகு அது நம் உயிராக மாறிவிடுகிறது… என்று சொல்லலாம்.
தினசரி நாம் சாப்பிடும் காய்கறிகள், கீரைகள்,பழங்கள் ஆகியன,செடி கொடிகளில் இருந்து பறிக்கப்பட்ட பிறகும் கூட குறிப்பிட்ட காலம் வரை அவற்றின் செல்கள் சுவாசித்துக் கொண்டிருக்கின்றன.அதனால்தான் அவை புதிதாகவே காணப்படுகின்றன. அறிவியல் ரீதியாக அவற்றிற்கு ஒரு வித உயிர்ப்பு தன்மை உள்ளது.
நாம் உணவை சமைக்கும்போது அதில் உள்ள செல்கள் முற்றிலும் செயலிழந்து விடுகின்றன. ஆனாலும் அதற்குள் இருக்கும் சத்துகளும், ஆற்றலும் அழிவதில்லை.
தமிழர் வாழ்வியல் மரபிலும், ஆன்மீகத்திலும் அன்னம் பரப்பிரம்மா… என்பார்கள். அதாவது உணவே தெய்வம்,உணவே உயிர்.
நாம் உண்ணும் உணவு வெறும் ஜடப்பொருள் அல்ல. அது பிரபஞ்ச ஆற்றலின் உதவியோடு(சூரிய ஒளி,நீர்,காற்று,மண், ஆகாய சக்தி ) உயிர்ப்பு சக்தியை தனக்குள் சேமித்து வைத்திருக்கின்றன.
உணவு என்பது இன்னொரு உயிரின் தியாகம்.அது தாவரவகை உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் தன் உயிரை மாய்த்துக் கொண்டுதான் நமக்கு உயிரூட்டுகின்றன.
உயிருள்ள உணவு
ஒரு விதை ஈரப்பதம் பட்டு முளைவிடும் போது அங்கே புதிய உயிர் பிறக்கிறது. இதைத்தான் முளை கட்டிய தானியங்கள் என்கிறோம். இவற்றை உண்ணும் போது நமக்கு கிடைக்கும் ஆற்றல் மிக அதிகம்.
நொதித்தலில் உருவாகும் உயிர்
நமது பாராம்பரிய இட்லி,தோசை மாவு புளிப்பது,தயிர் உறை ஊற்றுவது போன்றவற்றில் கோடிக்கணக்கான நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.இந்த உணவுகளில் நிஜமாகவே உயிர் இருக்கிறது.
உணவுக்கு தனிப்பட்ட மனம், உணர்வு இல்லாவிட்டாலும் உயிரை உருவாக்கும், உயிரைத் தாங்கிப் பிடிக்கும் ஆற்றல் அதற்கு முழுமையாக உள்ளது.நாம் உண்ணும் உணவு தான் நம் உடலாகவும்,நம் எண்ணங்களாகவும் மாறுகிறது. அதனால்தான் உணவை மதித்து நன்றியோடு உண்ண வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
இதன் ரகசியம் உணர்ந்ததால்தான் அவர்கள்,உயிர் உணவுகளை உண்டு நலமாக வாழ்ந்தனர். நம் தொன்மை உணவு முறைகளில் அன்று முதல் இன்று வரை உயிரோட்டமாக இருக்கிறது.
உயிர் உணவுகளின் அற்புதங்களை உணராததால் நம் உடலை நோய்களுக்கு வாடகைக்கு விட்டு அதற்கு நாமே மருந்து மாத்திரை என வரி செலுத்திக் கொண்டிருக்கிறோம்.எனவே உயிர் உணவுகள் பற்றி அறிந்து அவற்றை செவ்வனே நம் வாழ்வில் பயன்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.
உயிருள்ள உயிர் சக்தி தானியங்களை வறுத்தும், பொரித்தும், வேகவைத்தும் அவற்றின் உயிர் சக்தியை கொன்று சாப்பிடுகிறோம். இது நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய கசப்பான உண்மை.
தானியங்கள், விதைகள்,கீரைகள், பழங்கள், கிழங்குகள் ஆகியவற்றை அவற்றின் உயிர் சக்தியோடு உண்ணும்போது நாம் அளப்பறிய உயிர் சக்தியை பெறுகிறோம்.
கோதுமை,கம்பு, கேழ்வரகு, கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, மொச்சை,பட்டாணி, அவரை,துவரை, தினை,எள்ளு, கொள்ளு,உளுந்து, சாமை மற்றும் அனைத்து தானிய வகைகளையும் அளவுடன் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கும்போது அவை முளைவிட்டிருப்பதை பார்க்கலாம். இவ்வாறு முளைகட்டின தானியங்கள் மனித உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகின்றன.
முளைகட்டி உயிரூட்டப்பட்ட தானியங்களை மற்ற இயற்கை உணவு வகைகளுடன் சேர்த்து உண்பது மிகுந்த பயனைத் தரும்.இவ்வாறு சாப்பிட முடியாதவர்கள் முளைகட்டின தானியங்களை மாவாக்கி அந்த மாவினைக் கொண்டு உணவு பண்டங்களைத் தயாரித்து சாப்பிடும்போது சாதாரணமாகக் கிடைக்கும் சத்தைப்போல் 2 முதல் 3 மடங்கு அதிகமாக கிடைக்கிறது.
முளைகட்டின தானியங்களில் வைட்டமின் இ வைட்டமின் சி, வைட்டமின் டி ஆகிய சத்துகளுடன் கார்போஹைட்ரேட், பொட்டாசியம்,புரதம் போன்ற சத்துக்களும் உள்ளன.இவ்வாறு முளைகட்டின தானிய வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆண்,பெண் இருவரிடம் உள்ள மலட்டுத் தன்மைக்கு தீர்வு ஏற்படுகிறது. ஜீவசக்தி அதிகரிக்கிறது.
முளை கட்டிய உயிர் உணவுகளுடன், பழவகைகள். காய்கறிகள்,தேன், தேங்காய்,பேரீச்சை , உலர்ந்த பழங்கள் ஆகியவற்றை உண்பது அமிழ்தினும் இனியது. அதிசயங்கள் நிறைந்தது.
முளைகட்டுவது எப்படி?
நன்கு முற்றின தானிய வகைகளை தேவையான அளவிற்கு எடுத்துக் கொள்ள வேணடும். அவற்றை தனித்தனியே ஊறவைத்து பின்னர் ஒன்றாக மெல்லிய துணிக்குள் கட்டி தொங்கவிடவேண்டும்.அவ்வப்போது குளிர்ந்த நீரை தானிய முடிச்சின் மீது தெளித்து ஊறவைக்க வேண்டும்.12 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் உணவு தானியங்கள் முளைத்துவிடும்.
இந்த தானியங்களை ஒரு அகலமான தட்டு அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் கொட்டி அதை அப்படியே குடும்பத்தினர் அனைவரும் பயன் படுத்தலாம். முளைகட்டின தானியங்களில் சுவையும் மிகுதியாக இருக்கும். உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகளும் கிடைக்கும்.
முளை கட்டின தானியங்களின் சிறப்புகளை உணர்ந்துதான் எங்கள் நிறுவன உணவு உற்பத்தி நிபுணர்கள்
முளை கட்டின தானியங்களுக்கு பல மடங்கு உயிரூட்டம் அளித்து மாவு வகைகளை தயாரித்துள்ளனர். இது நாடு முழுவதும் விற்பனையில் உள்ளது.மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல்வேறு நோய்களுக்கு தீர்வாகவும் உயிர் உணவுகளை பரிந்துரைக்கிறோம். பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள் உடல் ஆற்றலோடு விளங்கவும், நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ளவும் உயிர் உணவுகளை அவர்களின் உணவு முறையாக்கி வெற்றி கண்டு வருகிறோம். இப்போதே அறிவியல் தொழில்நுட்ப உலகம் உயிர் உணவுகளை பற்றி சிந்திக்கத் தொடங்கி விட்டது.
மேலும் உயிர் உணவுகள் குறித்த பயிற்சிகளை அளித்து வணிக ரீதியில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் பணியிலும் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்,
எண்:11,பாரதிதாசன் தெரு,பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம்,
கடலூர்- 607 001,
செல்:93676 22256.

