புற்றுநோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் புற்று நோய்க்கு முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும். பெரும்பாலான புற்றுநோய் பாதிப்புகள் முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்கப்படுகிறது.

புற்றுநோய்க்கான பரிசோதனைகள் ஒவ்வொரு உடல் உறுப்பு பாதிப்புகளுக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. கட்டணமும் அதிகம். இந்தியாவிலேயே முதல்முறையாக சாதாரண ரத்த பரிசோதனையிலேயே 10-14 புற்றுநோய் பாதிப்புக்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்.

புற்றுநோயை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிவது, நோயாளிகளின் உயிர்வாழ்வு விகிதத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

இந்த நிலையில், இந்தியாவின் முன்னணி மற்றும் பிரத்யேக விரிவான புற்றுநோய் சிகிச்சை அமைப்பான அப்போலோ கேன்சர் சென்டர்ஸ்(ACCs), ‘சைடஸ் லைஃப்சயின்சஸ்’ (Zydus Lifesciences) நிறுவனத்துடன் (03.07.2026)ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதன் மூலம், துல்லியமான புற்றுநோய் சிகிச்சைக்கான நிறுவனமான ‘கார்டன்ட் ஹெல்த்’ (Nasdaq: GH) உருவாக்கியுள்ள, ஆய்வக அடிப்படையிலான ‘ஷீல்டு” மல்டி-கேன்சர் டிடெக்ஷன்’ பரிசோதனை முறை இந்தியாவில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த அதிநவீனப் பரிசோதனைக்கான வாய்ப்பை வழங்கும் முதல் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனமாக ஏசிசிஸ் உருவெடுத்துள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் இந்த ரத்தப் பரிசோதனை முறை அறிமுகம் ஆவது மிகப்பெரிய அறிவியல் முன்னேற்றமாக கருதலாம்.இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டுபிடித்து முழுமையாக சிகிச்சை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது ள்ளது.இந்த பரிசோதனை முறை பரவலாக எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நமது நோக்கம்.

– பவித்ரன். ஹெல்த் அண்ட் பியூட்டி