முதியோர் உறைவிட பராமரிப்பு சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளையும் ஒருங்கிணைத்து வழங்குவதில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ‘அதுல்யா சீனியர் கேர்’ (Athulya Senior Care) முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம், முதியோர் மருத்துவப் பராமரிப்பிற்காகவே (Geriatric care) பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தனது முதல் மருத்துவமனையான ‘அதுல்யா ஜெரியாட்ரிக் கேர் ஹாஸ்பிடல்’ (Athulya Geriatric Care Hospital) கிளையைச் சென்னையின் வளசரவாக்கத்தில் தொடங்கி உள்ளது.

முதியோர் பராமரிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையவிருக்கும் இந்த மையம், அதுல்யா நிறுவனத்தின் பிரத்தியேக முதியோர் மருத்துவமனைப் பராமரிப்பு, முதியோர் ஆதரவு இல்லங்கள் மற்றும் உறைவிடப் பராமரிப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைந்த ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் முதியோருக்கு 360° கோணத்தில் முதியோருக்கு முழுமையான சேவையை வழங்குகிறது.  இந்த அதிநவீன மருத்துவ மையத்தைத் தமிழ்நாடு மேதகு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கார்த்திக் நாராயண் (Dr. Karthik Narayan, Founder and Managing Director, Athulya Senior Care), நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (திரு. ஸ்ரீநிவாசன் ஜி (Mr. Srinivasan. G, Founder and CEO, Athulya Senior Care), மற்றும் நிறுவனரும் இயக்குநருமான திருமதி. கிருஷ்ணா காவ்யா (Miss. Krishna Kavya, Founder and Director, Athulya Senior Care) ஆகியோருடன் மருத்துவ வல்லுநர்கள், முதியோர் பராமரிப்பு நிபுணர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

முதியோர் மருத்துவமனை ஆரம்பிக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

முதுமையில் பல்வேறு நோய் பாதிப்புகள் வரலாம்.  அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் பரவலாக எல்லா பகுதிகளிலும் இது போன்ற மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும்‌.

-ஷைலஜா. ஹெல்த் அண்ட் பியூட்டி.