நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு அதிகரிக்கும் என்று தவறாக பிரச்சாரம் செய்து நம்மை பயமுறுத்தி விட்டார்கள்.அதனால் கடலை சாப்பிடுவதை பலரும் தவிர்க்க நினைக்கிறார்கள்.

உண்மையில் நிலக்கடலை உடலுக்கு மிகவும் நல்லது.இதில் புரதம், வைட்டமின் B3, ஃபோலிக் அமிலம், வைட்டமின் E, இரும்பு,ஸிங்க், பாஸ்ஃபரஸ், ஆகிய சத்துகள் உள்ளன. கடலையின் சிவந்த தோலில் இதயத்தைப் பாதுகாக்கும் ஆற்றல் கொண்ட ரெஸ்வெரட்ரால் சத்து மிகுதி. கடலை எண்ணெயில் பூரிதமாகாத (Monounsaturated) வகை கொழுப்பு அமிலமும் இருக்கிறது. இதய வலிமைக்கு நிலக்கடலை ஏற்றது.

தினமும் ஒரு கைப்பிடி அளவு மட்டுமே நிலக்கடலையைச் சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். ஆனால், வணிகநோக்கில் கடலையை உப்பிட்டு வறுக்கும்போது ரெஸ்வெரட்ரால் சத்து சிதைத்துவிடும். சுவையை

அதிகரிப்பதற்கு டால்டா கலந்த மணலில் வறுக்கும்போது கலோரியும் அதிகரித்துவிடும். எனவே, முழுக்கடலையை அவித்து அல்லது உப்பு, டால்டா சேர்க்காமல் வறுத்து உண்ணும்போது மட்டுமே முழுமையான மருத்துவ குணங்களைப் பெறமுடியும்.ஏழைகளின் முந்திரிப் பருப்பு என்று சொல்வார்கள்.ஆண்கள் பெண்கள் அனைவரும் அவசியம் சாப்பிட வேண்டும்.