
தமிழ்நாட்டில் உள்ள காய்கறி கடைகளில் கறிவேப்பிலையை இலவசமாக தருகிறார்கள்.அதனால் தானோ என்னவோ கறிவேப்பிலையின் மருத்துவ குணத்தை அறியாமல் அதை வீணடிக்கிறார்கள்.
கறிவேப்பிலை ஒரு சிறந்த மூலிகை.இதில் வைட்டமின் ஏ,சி, கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.இவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.
கறிவேப்பிலை சற்று காய்ந்து விட்டால் அதைப் பயன்படுத்த பலரும் விரும்புவதில்லை.ஒரு தட்டில் சுத்தமான காட்டன் துணியை விரித்து அதில் அந்த இலைகளைப் பரப்பி மேலேயும் ஒரு துணியால் மூடி நிழலில் வைத்து நன்றாக உலர்த்திப் பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். கிரேவி,குழம்பு வகைகளில் இந்தப் பொடியைச் சேர்க்கலாம்.
புதினாவையும் இதே போல பொடியாகச் செய்து பயன்படுத்தலாம். பிரியாணி,பச்சை நிற கிரேவி வகைகள் உள்ளிட்டவற்றுக்கு இதைப் பயன்படுத்தலாம். இதுபோல பொடியாகச் சேர்த்துவிட்டால் குழந்தைகள் ஒதுக்காமல் சாப்பிட்டுவிடுவார்கள்.

