
டாக்டர் பி.அருண், சித்த மருத்துவர்
தமிழ் நாட்டில் இரண்டு விதமான அரிசிகளை பயன்படுத்துகிறோம்.நெல்லைப் புழுங்கவைக்காமல், அப்படியே பச்சையாகப் பதப்படுத்தும் முறையில் தயாரிக்கப்படுவது பச்சரிசி.இது பலம் கொடுக்கும்.அதற்காக எல்லோரும் இந்த அரிசியை பயன்படுத்தலாமா என்றால்… கூடாது என்று தான் சொல்ல வேண்டும். இதில் கொழுப்புச்சத்து அதிகம்.சீரணத்துக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.எனவே, உடல் நோயுற்ற போது, குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்னைகள் இருக்கும்போது பச்சரிசிச் சோறு சாப்பிடக் கூடாது.
கைக்குத்தல் அரிசி இப்போது கிடைப்பது அரிது.இந்த அரிசி தவிடு பிரியாமல் இருக்கக் கூடியது என்பதால், இதில் நார்ச்சத்து மிக அதிகம். கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது.
நமது ஊரில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவது புழுங்கல் அரிசி.இது எளிதில் சீரணம் ஆகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது.இன்று நாம் கடை களில் வாங்கும் ரீஃபைண்டு செய்யப்பட்ட புழுங்கல் அரிசியானது பட்டை தீட்டப்பட்டு, சத்துகள் எல்லாம் நீக்கப்பட்டு வெறும் சக்கையாகத் தான் கிடைக்கிறது. இந்த வகை அரிசியில் ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்து மட்டுமே மிகுந்து காணப்படுகிறது.
எனினும் புழுங்கல் அரிசி சாப்பாடு நல்லது.
டாக்டர் பி.அருண், சித்த மருத்துவர்

