
-டாக்டர்.கு.கணேசன்
- நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்வதையும், அடிக்கடி குனிந்து எழுந்து வேலை செய்வதையும் தவிர்க்கவும்.
- நாற்காலியில் உட்காரும்போது கால் மீது கால் போட்டு உட்காரக்கூடாது.
- முதுகுவலி உள்ளவர்கள் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கக் கூடாது. இவர்கள் தரையிலோ பெஞ்சிலோதான் படுக்க வேண்டும். சரியான மெத்தையில் பக்கவாட்டில், சற்று குப்புறப் படுத்துக்கொள்ளலாம்.
- சுமையைத் தூக்கும்போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக்கொள்ள வேண்டும்.
- நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே தரையைச் சுத்தம் செய்யவது நல்லது.
- மேற்கத்தியக் கழிப்பறையைப் பயன்படுத்தினால் தொந்தரவு இருக்காது.
- உயரமான செருப்புகள் அணிவது ஆகாது.
- மோசமான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்லக் கூடாது. நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து ஸ்டீயரிங் அருகில் அமர்ந்து ஓட்ட வேண்டும்.
- உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
- சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி அவசியம்.

