
தமிழ்நாட்டில் அக்குபஞ்சர் மருத்துவத்தை ஏராளமானவர்களுக்கு கற்றுக்கொடுத்தது மட்டும் அல்லாமல் தொடர்ந்து பயிற்சியும் சிகிச்சையும் அளித்து வரும் டாக்டர் தம்பதிகளான டாக்டர் சி.ஏ.ரவி,டாக்டர் உஷாரவி தம்பதியருக்கு”அக்குபஞ்சர் தூண்கள்”என்ற விருது கொடுத்து பாராட்டி இருக்கிறார்கள்.
புதுச்சேரியில் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கவுன்சில் ஆஃப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் அண்ட் ரிசர்ச் சென்டரின் செயற்குழு கூட்டம் 16.11.24 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு டாக்டர் சி.ஏ.ரவி அவர்கள் தலைமை ஏற்றார்.இக்கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் முக்கிய பொறுப்பாளர்கள் 25 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சமீபத்தில் ஆயுஷ் கவுன்சில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆக(Ayush Integrated Council) சுசான்லி டாக்டர் ரவி அவர்களை நியமித்தமைக்கு பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தனர்.

டாக்டர் தம்பதியர் 33 ஆண்டுகளாக தன்னலம் கருதாது செயலாற்றி வருவதை பாராட்டி இந்த விருதை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.விருது வழங்கும் விழாவில் டாக்டர்கள் அனந்தகிருஷ்ணன், மனோஜ்,ராஜலிங்கம், ஹரிஹரன், கணேஷ்பாபு,யோகேஸ்வரி கிருஷ்ண சிவசலபதி,ஆசுக்கவி எம்.நவநீதகிருஷ்ணன், சுந்தரமூர்த்தி,புகழேந்தி, சுகன்யா,சாரதாஸ்ரீ,லீனா,ரவிசங்கரன், சுபாராணி,வாசன்,கிருஷ்ணராஜ், செல்வகுமார்,வடிவேல்ராஜன், பாபுகுமார்,கோதை அபூபக்கர்,யோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் தம்பதியருக்கு நமது இதழ் சார்பில் வாழ்த்துகள்.
-டாக்டர் ஜி.ராஜமோகன்.

