
டாக்டர் எம்.ராமலக்ஷ்மி,BHMS,DAT.DRFT.
சுயம் ஹோமியோ கிளினிக், பூந்தமல்லி
90429 59943
மழைக்காலங்களில் பரவும் தொற்று நோய்களில் முக்கியமானது மெட்ராஸ் ஐ எனும் கண் அலர்ஜி நோய்.இது பெரும்பாலும் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது.சில சமயங்களில் பாக்டீரியா தொற்றினாலும் ஏற்படலாம்.இவ்வகை நோய்த் தொற்று நம் கண்ணின் வெண் படலத்தில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. சாதாரணமாக கண் வலி,சிவந்த தன்மை,எரிச்சல் வலியில் தொடங்கி சில சமயங்களில் பார்வைத் திறனையும் பாதிக்கலாம்.
வைரஸ் தொற்று பெரும்பாலும் அடினோ வைரஸ் என்று சொல்லக்கூடிய சாதாரண ஜலதோஷம்,தும்மல் போன்ற அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய வைரசால் தொந்தரவு வரலாம்.
அதீத கண் வறட்சியினாலும், அளவுக்கு அதிகமாக கம்ப்யூட்டர்,மொபைல் போன் பயன்பாட்டாலும் கண்களில் தொற்று ஏற்படலாம்.
ஹோமியோபதி சிகிச்சை
கண் அலர்ஜி பாதிப்புகளுக்கு எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் எளிய முறையில் ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்தி தீர்வு காண முடியும்.பாதிக்கப்பட்டவரின் உடல்,மன குறிகளுக்கு ஏற்ப சிறந்த மருந்தினை தேர்வு செய்து கொடுப்பதன் மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.
ஹோமியோபதி மருந்துகள்
அக்கோனைட், பெல்லடோனா, அர்ஜென்டம் நைட், யூப்ரேசியா,பல்சாடில்லா,ஆர்கனிகம் ஆல்பம்,எபிஸ்மெல்,மெர்க் சால்,ரஸிடாக்ஸ்.
நோய் தடுப்பு வழிமுறைகள்
*அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம்.
*குறைந்தது 20 வினாடிகள் சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.
*கண்களை தொடுதல், தேய்த்தல் கூடாது.
*நோய்த் தொற்று உள்ளவர் உபயோகப்படுத்திய பொருட்கள் மற்றும் துணிகளை தனியாக வெந்நீரில் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
*காண்டாக்ட் லென்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும்.
*கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது.
*மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்தவித கண் சொட்டு மருந்தையும் பயன்படுத்தக் கூடாது.
*தொற்று பாதிப்பு உள்ளவர் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

