
டாக்டர் சி.ஏ.ரவி,
பேராசிரியர் டாக்டர் உஷா ரவி,
மூலிகை மற்றும் அக்குபஞ்சர் மருத்துவ தம்பதியர்
2024 ஆம் ஆண்டு கோடைகாலம் மிரட்டலாக தொடங்கிவிட்டது. வெய்யிலும் வெப்பமும் வாட்டி வதைக்கிறது.வெப்ப நிலை மேலும் உயரும் என அரசு எச்சரித்துள்ளது. குழந்தைகள், முதியோர்கள் ,மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே சூப்பர் எல் நினோ என்ற வானிலை பேரிடர் குறித்த தகவல்கள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
வெப்பச் சோர்வு, சன்பர்ன், நீரிழப்பு அபாயம்,சுவாசப் பிரச்சனை,தோல் வெடிப்பு, அஜீரணம், வெப்ப பக்கவாதம் உள்ளிட்ட கோடைகால நோய்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. இவ்வாறு கோடை என்னதான் நம்மை அச்சுறுத்தினாலும் ஆயுர்வேதம், சித்தா,அக்குபஞ்சர், ஹோமியோபதி மற்றும் இயற்கை சிகிச்சை முறைகள் நம்மை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் கேடயங்களாக உள்ளன.

பெரும்பாலும் வெய்யில் காலத்தில் அதிக பாதிப்பைத் தருவது வெப்ப சோர்வு நோய்.அதிக வெப்பநிலையால் உடல் சூடடைவதால் இது ஏற்படுகிறது. தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் தசை பலவீனம் ஆகியவை இதன் அறிகுறிகள்.
வெப்பச் சோர்வுக்கு கை கண்ட சிகிச்சை ஆயுர்வேதத்தில் உள்ளது. பஞ்சகர்மா சிகிச்சைகள் மூலம் உடலை உடனுக்குடன் குளிர்விக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடலுக்கும், மனதுக்கும் ஓய்வையும் அளிக்க முடியும் .
அதற்கடுத்து மோசமான அச்சுறுத்தலாக இருப்பது சன்பர்ன்.இதனால் பாதிக்கப்படும் போது தோல் சிவக்கும்,வலி மற்றும் கொப்புளங்கள் ஏற்படும்.இதிலிருந்து தப்பிக்க கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் மற்றும் சந்தன பேஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
நீரிழப்பு
உடலில் நீர் திரவ நிலை, சமநிலையில் இருப்பது அவசியம்.கடும் வெப்பத்தால் உடல் திரவத்தை இழக்கும்போது,நீரிழப்பு ஏற்படுகிறது.இதனால் வாய் வறட்சி, தாகம் மற்றும் சோர்வு, மயக்கம் உள்பட பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம்.
நிறைய தண்ணீர், தேங்காய் தண்ணீர் மற்றும் மூலிகை தேநீர் குடித்து நீரிழப்பை சமன் செய்யலாம்.
கோடைகாலத்தில் உடலில் பித்தம் அதிகரிப்பதால், தலைவலி வரலாம். இதற்கு கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனையில் சிரோதரா எனப்படும் எண்ணெய் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதன் மூலம ரத்த ஓட்டம் சீர்படுவதுடன் உடலின் வெப்பமும் தணிந்து தலைவலி குணமாகிறது.சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் இந்த எண்ணெய் குளியலைத் தவிர்க்க வேண்டும்.
கண் நோய், கண்ணில் எரிச்சல், கண்ணில் நீர் வருவது, கண் உலர்ந்து போதல் போன்ற பிரச்சினைகள் கோடைகாலத்தில் ஏற்படுகின்றன.
ஆயுர்வேத மருத்துவத்தில் கண் பாதுகாப்புக்கு என்று சில சிகிச்சை முறைகளை வழங்குகிறோம்.இந்த சிகிச்சை நமது கண்ணைச் சுற்றியுள்ள நரம்பு, தசைகளை வலுப்படுத்தும்.இதனால் கண்ணின் சுமை குறைந்து பார்வைத் திறன் மேம்படுகிறது.குறிப்பாக சிறுநீர் பாதை தொற்று,மூலம் பிளவு ஆகிய நோய்கள் கோடைகாலங்களில் அதிக அளவில் மக்களை பாதிக்கின்றன. இந்நோய்களை ஆயுர்வேதம்,இயற்கை, சித்தா சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தி வருகிறோம்.
கோடையில் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் இஞ்சி, சீரகம் மற்றும் கொத்தமல்லி போன்ற இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்த ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. கோடைகாலங்களில் பலருக்கு மகரந்தம், காற்று மாசுபாட்டின் காரணமாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்படுகிறது.நாஸ்யா (நாசி சொட்டுகள்), நீராவி உள்ளிழுத்தல் மற்றும் மூலிகை வைத்தியம் போன்ற ஆயுர்வேத சிகிச்சைகள் மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைத்து சுவாசத்தை மேம்படுத்துகின்றன.
தேன், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்ற இயற்கை மருந்துகள் இதற்கு பயன்படுகின்றன.ஷிரோதாரா மற்றும் அபியங்கா போன்ற ஆயுர்வேத சிகிச்சைகள் கோடைகால மன அழுத்தத்தை குறைக்கிறது.உடலின் இயற்கையான பாதுகாப்பை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
உப்பு, புளிப்பு, மசாலா,கார உணவு வகைகள், எண்ணெயில் பொரித்த உணவு வகைகள்,ஐஸ், குளிர்பானங்கள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
நாள் முழுவதும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.அது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும்.ரத்தத்தில் சிவப்பணுகள் சத்துகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும்.குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படும் குளிர்ந்த நீரைவிட, பானையில் கிடைக்கும் குளிர்ந்த நீரைக் குடிப்பது நல்லது.தர்பூசணி, திராட்சை பழங்களின் சாறுகளை ஐஸ் சேர்க்காமல் அருந்தலாம்.இளநீர் குடிப்பதன் மூலம் வயிற்றுப் பொருமல் பிரச்சினையை சமாளிக்கலாம்.
கோடை கால நோய்களுக்கு சிறந்த சிகிச்சைகளை கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை வழங்கி வருகிறது.
தகவல் தொடர்புக்கு:
” தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர் வேதிக் கிளினிக் “
” தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர் வேதிக் கிளினிக் “
எண்: 11, பாரதிதாசன் தெரு ,
பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம்,
கடலூர்-607 001
செல்-93676 22256.

