
ஆயுர்வேதம் என்பது தேவரகசியமோ அல்லது மிகப்பெரிய மருத்துவ சூட்சுமமோ அல்ல.மனிதர்கள் அனைவரும் அன்றாட வாழ்வில் பின்பற்றக்கூடிய எளிமையான செயல்முறைகளேயாகும்.அதனால் தான், ஆயுர்வேதத்தை நம் முன்னோர்கள் சித்தர்கள் வழியாக இயற்கை மனித குலத்திற்கு அளித்த பெருங்கொடை என்று குறிப்பிடுகிறார்கள்.
நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட,நோய் வராமல் காக்க வேண்டும் என்பதே ஆயுர்வேதத்தின் முக்கிய நோக்கம். அன்றாட வாழ்வில் ஆயுர்வேதம் எனும் அற்புதத்தை பயன்படுத்தத் தொடங்கினால் நோய் வராமல் தடுத்துக்கொள்ளலாம்.நம் நலமான மகிழ்வான வாழ்க்கையை ஆயுர்வேதம் சாத்தியப்படுத்தும். ஆயுர்வேதம் என்பது வெறும் மருந்து முறை அல்ல;அது உடல், மனம், உணவு, இயற்கை ஆகியவற்றை சமநிலையில் வைத்திருக்கும் வாழ்வியல் முறையாகும்.
ஆயுர்வேதம் மனித உடலை முக்கிய மூன்றுத் தன்மைகளாகப் பார்க்கிறது.
வாதம் – இயக்கம்
பித்தம் – வெப்பம் / ஜீரணம்
கபம் – நிலைத்தன்மை
இந்த மூன்றும் சமநிலையில் இருந்தால் உடல் நலம் சிறப்பாக இருக்கும் என்பதால் அந்த சமநிலையை ஏற்படுத்தும் வழிமுறைகளை ஆயுர்வேதம் நமக்கு காட்டுகிறது.
அன்றாட வாழ்வில்
ஆயுர்வேத பழக்கவழக்கங்கள்
அதிகாலை துயிலெழுதல்
இயற்கை பிரம்ம முகூர்த்தத்தில் துயிலெழுகிறது. கருக்கலில் தாவரங்கள் புதிதாக வளர்ச்சி பெறுகின்றன. பறவைகள்அதிகாலையில் தன் பயணத்தை தொடங்குகின்றன, விலங்குகள் உணவுத் தேடலை ஆரம்பிக்கின்றன.
சூரிய உதயத்திற்கு முன் எழுவதை ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. இதனால் மனம் அமைதி பெறுகிறது. அறிவுத் திறன் கூர்மையாகிறது. உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகின்றன.
வெந்நீர் ரகசியம்
காலையில் வெந்நீர் குடிப்பது ஜீரணத்தன்மையை தூண்டி
உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. தொண்டை மற்றும் குடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது.
நாக்கு சுத்தப்படுத்துதல்
காலையில்,நாக்கை சுத்தப்படுத்துவது அவசியமாகிறது. அப்போதுதான் வாய்புற நச்சுகளை வெளியேற்றி, செரிமான சக்தியை தூண்டுகிறது.
வாய் கொப்பளித்தல்
நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பது ஈறுகளை வலுப்படுத்துகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
எண்ணெய் மசாஜ்
குளிப்பதற்கு முன் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு உடலை மசாஜ் செய்வது சருமத்தை மென்மையாக்குகிறது,நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகிறது.
உணவே மருந்து
சரியான உணவு தான் முதல் மருந்து என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
நல்ல உணவுப் பழக்கங்கள் கடைபிடிக்க வேண்டும்.பசித்தபின் உண்பது என்பது பாதி நோய்கள் வராமல் தடுக்கும் யுக்தியாகும். அளவோடு உண்பது ஆரோக்கித்திற்கான அடித்தளமாகும்.
மதிய உணவை பசி எடுக்கும்போது, அதாவது சூரியன் உச்சத்தில் இருக்கும்போது (12 மணி முதல் 1 மணி வரை) சாப்பிடுவது சிறந்தது. இரவு உணவு மிதமாக 7 மணிக்கு முன்னதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். உணவை ரசித்து, மென்று, அமைதியான சூழலில் உண்ண வேண்டும்.
ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள்
கம்பு,கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள், காய்கறி,பழங்கள், இயற்கை உணவுகள் அத்துடன் உணவில் இஞ்சி,மஞ்சள், சீரகம்,மற்றும் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கிருமிகள் ஒழிப்புக்கு மஞ்சள், ஜீரணத்திற்கு இஞ்சி,
சளி,இருமலுக்கு துளசி,உடல் வெப்பத்திற்கு மிளகு,உள்ளிட்ட பல்வேறு ஆயுர்வேத மகத்துவ பொருட்கள் நம் சமையலறையில் மட்டுமின்றி நம் தோட்டங்களிலும் உள்ளன.
உடற்பயிற்சி
ஆயுர்வேதத்தில் முக்கியமாக உடல் இயக்கத்தை வலியுறுத்துகிறது.
தினமும் நடைப்பயிற்சி அவசியத்தை வலியுறுத்துகிறது..
இவற்றுடன் யோகா, சுவாச பயிற்சி ஆகியன மேம்படுத்தப்பட்ட நலமான வாழ்வை அமைத்து தரும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இலக்கை நோக்கி உழைக்கும் திறனை, படைப்பாற்றலை அதிகரிக்கும். மன அழுத்தமின்றி உள்புற வெளிப்புற சூழல்களை அமைதியாக வைத்திருக்கும்.
நல்ல தூக்கம்
ஒவ்வொரு மனிதருக்கும் நேரத்திற்கு தூக்கம் அவசியம் என்பது ஆயுர்வேதத்தின் முக்கிய கோட்பாடு. போதுமான தூக்கம் உடலை புதுப்பிக்கும். இப்போதெல்லாம் கைபேசிகளே தூங்க வைக்கின்றன. அடுத்த நாள் காலை தாமதமாகவே விடிகிறது.இது பெரும் ஆபத்தாக
மாறிவருகிறது.
மனவளக்கலை
ஆயுர்வேதம் ஒவ்வொரு மனிதரின் மனதையும் ஆராதிக்கிறது.மனம் நலமுடன் இருந்தால் உடல் நலமுடன் இருக்கும் என்று வலியுறுத்துகிறது. எனவே ஆயுர்வேதத்தின் வழிகாட்டலை பின்பற்ற வேண்டும். கோபத்தை குறைப்பது நல்லது.
அமைதியாக பேசுவதும் பிறர் பேசுவதை கேட்பதும் இயற்கையோடு தோழமை கொள்வதும் மன வளங்களை அதிகரிக்கும்.
ஆயுர்வேதத்தை நம் வாழ்வியல் முறையாக மாற்றிக்கொண்டால் மருந்து மாத்திரைகள், மருத்துவமனைகள் தேவையில்லை.நம் உடல் பெருங்கோவிலாக மாறும்.உள்ளம் இறைவன் குடியிருக்கும் இடமாகும். ஆயுர்வேதம் என்ற மகத்தான மார்க்கத்தை நாங்கள் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம். எங்கள் சுசான்லி மருத்துவ குழுமத்தில் தலை சிறந்த ஆயுர்வேதிக் மருத்துவ நிபுணர்கள்,சித்தா, ஹோமியோபதி, அக்குபஞ்சர் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஆயுர்வேதத்தின் அடிப்படையில் மருந்துகள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை எங்கள் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.அது குறித்து பயிற்சி அளிக்கவும் உங்கள் பகுதிகளில் விற்பனை நிலையங்கள் தொடங்கவும் நாங்கள் வழிகாட்டுகிறோம்.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர்,ஆயுர் வேதிக் கிளினிக்,
எண்:11,பாரதிதாசன் தெரு ,பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம், கடலூர்-607 001
செல்:93676 22256.

