மது நாட்டில் ஆன்மீக நம்பிக்கை அதிகம்.அதில் தவறேதும் இல்லை. ஆன்மீக ரீதியாக நாம் பயன்படுத்தும் பொருட்கள் உடல் நலத்தை பாதிக்கக்கூடியதாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில் இந்த செய்தியை பதிவு செய்கிறோம்.

ஊதுபத்தியின் புகை, சிகரெட் புகையை விட ஆபத்தானது என தென் சீன தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி எச்சரிக்கை செய்துள்ளது.

ஊதுவத்தியில் சல்பர் டை ஆக்ஸைடு,கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மிக நுண்ணிய நச்சுப் பொருள்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நச்சுப் பொருள்கள் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை என்று கண்டறியப் பட்டுள்ளது.எனவே, அடிக்கடியும் அளவுக்கதிக மாகவும் ஊதுவத்தி ஏற்றி வைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.

பக்திக்காகவும் வாசனைக்காகவும் நாம் பயன்படுத்தும் ஊதுவத்தி, சாம்பிராணி போன்றவையும் உள்புற காற்று மாசில் கவனிக்க வேண்டிய விஷயங்கள். இவற்றில் வாசனைக்காக நிறைய ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள்.நாம் பற்றவைக்கும்போது கரியுடன் சேர்ந்தே இவை எரிகின்றன. புகைபிடிப்பதால் வரும் பாதிப்பை, மூடப்பட்ட அறைக்குள் பயன்படுத்தும் ஊதுவத்தி, சாம்பிராணியும் உண்டாக்கும்.

முக்கியமான வழிபாட்டு நாள்கள், பண்டிகைக்காலம் போல எப்போதாவது இவற்றை உபயோகிப்பதால் பாதிப்பில்லை. அந்தச் சமயங்களிலும் கதவு,ஜன்னல் போன்ற வற்றைத் திறந்து வைத்தபிறகே பயன்படுத்த வேண்டும். பென்சாயிக் அமிலம், கார்பன் மோனாக்ஸைடு, கார்பன் டை ஆக்ஸைடு போன்றவை அதிகம் இருக்கின்றன.நுரை யீரலுக்குள் தங்கு தடையின்றிச் செல்லும்.எனவே, இவற்றை ஆன்மிகமாக மட்டுமே பார்க்காமல் ஆரோக்கிய கோணத்திலும் பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

-எம்.சந்திரசேகர்.