-டாக்டர் பி.அருண்,B.D.S, சித்த மருத்துவர்

னைத்துப் பெண்களுக்கும் ஆரோக்கியமாகவும் சுகாதாரமாகவும் வாழும் உரிமை உண்டு.மாதவிடாய் என்பது நோயோ, அருவருப்பான விஷயமோ அல்ல.  ஒரு பெண் பருவமடைந்த நாள் தொடங்கி, மெனோபாஸ் நிலையை அடையும் வரை அவள் சந்திக்கிற உடல் மனரீதியான அனைத்து பிரச்சினைகளையும் முதலில் அவள் புரிந்து கொள்ள வேண்டும்.

பீரியட்ஸ் ஒரு சிலருக்கு சீராக வரலாம்.சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொந்தரவாகவும் அமையலாம். மருத்துவரின் உதவியை நாடி, மாதவிடாய் சிக்கல்களை சரி செய்து கொள்ள வேண்டும் அலட்சியமாக இருக்கக் கூடாது.

பீரியட்ஸ் வரலையா…. பப்பாளிப்பழம் சாப்பிடு… என்பது காலங்காலமாக நாம் கேள்விப்படுகிற ஆலோசனை தான். கனியாத பப்பாளிக்கு கர்ப்பப்பையைத் தூண்டச் செய்து,அது சுருங்கச் செய்யும் தன்மை உண்டு, அதனால்,பீரியட்ஸ் சீக்கிரமே வரும். இதிலுள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டக்கூடியது. அதன் விளைவாக பீரியட்ஸ் சுழற்சி தூண்டப்படும். செங்காய் என்று சொல்லக்கூடிய பாதி பழுத்த பப்பாளியை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸாக்கி குடிக்கலாம்.

மாதவிடாயை வரவழைப்பதில் பப்பாளிக்கு அடுத்தபடியாக அறிவுறுத்தப்படுவது எள்… தொடர்ந்து 15 நாள்களுக்கு எள்ளை உருண்டையாகவோ, பொடியாகவோ எடுத்துக்கொண்டால், அதை நிறுத்தும்போதே பீரியட்ஸ் வருவதற்கான அறிகுறிகளை உணரலாம்.பீரியட்ஸ் சுழற்சியை முன்கூட்டியே வரவழைக்கவும் இதைப் பின்பற்றலாம்.

எள்ளில் அன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலங்களும்,ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைய உள்ளன. இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பையைத் தூண்டி,பீரியட்ஸை வரவழைப்பது உண்மைதான் என்பதை சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. அதன்படி,எள் எடுத்துக் கொண்டோரில் 85 சதவிகிதம் பேருக்கு பீரியட்ஸ் சுழற்சி முறைப்பட்டதாகவும், முன் கூட்டியே வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி,தினமும் ஒன்று முதல் ஒன்றரை டீஸ்பூன் எள்ளுடன் பனைவெல்லம் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, வழக்கத்தைவிட சீக்கிரமே மாதவிடாய் வரும்.மாதவிடாய் சுழற்சி தள்ளித் தள்ளி வருவோருக்கும் அதை முறைப்படுத்தும். அதேசமயம்,அதிக அளவில் எள் எடுத்துக் கொள்வதும் சரியானதல்ல. அதனாலும் பக்க விளைவுகள் ஏற்படலாம்.

மாதவிடாயை முன்கூட்டியே வரவழைக்கவும் மூன்று-நான்கு மாதங்களுக்கொரு முறை பீரியட்ஸ் வருவோர்,அதை முறைப்படுத்தவும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எள்ளை எடுத்துக் கொள்ளலாம்.
-டாக்டர் பி.அருண்,B.D.S,சித்த மருத்துவர்