
டாக்டர்.சு.முத்துச் செல்லக்குமார்.எம்.டி.
கொரோனா எனும் கொடிய வைரஸ் பாதிப்பால் உலகமே உறைந்து போனது.லடசக்கணக்கான மரணங்கள்..! அந்த பாதிப்பில் இருந்து இன்னும் நாம் மீள முடியாமல் தவித்து வருகிறோம்.
சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து உள்ளது.அதுவும் இளம் வயதினரை அதிகமாக பாதிக்கிறது.
படிக்கலாம், தொழில் வியாபாரம் செய்யலாம், வேலைக்கு போய் சம்பாதிக்கலாம்.நமது அன்றாட வாழ்க்கையில் உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.இந்த வாழ்வியல் சார்ந்த ஆலோசனைகளை தினசரி கடைப்பிடிக்க வேண்டும்.
* இதய நோய்களைத் தவிர்க்க, உணவுக் கட்டுப் பாடு மட்டும் போதாது. உணவுக் கட்டுப் பாட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம்.
* மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்க வேண்டும்.
* புகையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
* தினசரி போதிய ஓய்வும், தூக்கமும் அவசியம்.
* ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தத்தில் மிகை கொலஸ்ட்ரால் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
* உணவில், முளைகட்டிய தானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், மீன்கள், பழங்கள், பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* உணவில் வெண்ணெய், நெய், டால்டா ஆகிய வற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
* பால், முந்திரி ஆகியவற்றைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.
* கொழுப்பு நீக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பாலையே (Skimmed Milk) பயன்படுத்துங்கள்.
* உணவில் உப்பு மற்றும் எண்ணெயை மிகவும் குறைவாகவே பயன்படுத்துங்கள்.
* சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் மற்றும் சஃபோலா வகை எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.
* நேரம் தவறாமல், சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்.
* தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 3 லிட்டர் என்ற அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.
* உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
* தோட்ட வேலை, நீந்துதல், சைக்கிள் ஒட்டுதல் போன்ற வற்றைக் கடமையாகச் செய்யாமல், நிதானமாக, பொறுமையாக அனுபவித்துச் செய்யுங்கள்.
* எப்போதும் வேலை வேலை என்றும், நேரம் போத வில்லை என்றும் அலுத்துக்கொள்ளாமல், நேரம் ஒதுக்கி, இயற்கையை ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* மாடிப் படிகளில் நடந்து செல்லுங்கள். மின் ஏணியை (லிஃப்ட்) தவிருங்கள்.
* சிறு சிறு வீட்டு வேலைகளை ஆர்வத்துடன் விரும்பிச் செய்யுங்கள்.
* மனத்தை ஒருநிலைப்படுத்துங்கள்.
* மருத்துவர் தரும் மருந்துகளை நீங்களாகவே நிறுத்தா தீர்கள், கூட்டவோ குறைக்கவோ செய்யாதீர்கள்.
* இடையிடையே, சரியான நேரங்களில் மருத்துவப் பரிசோதனை, இதயப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
மேலே சொல்லப்பட்ட அறிவுரைகளைத் தவறாமல் கடைப் பிடித்து, ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள்.

