-டாக்டர்.டி.காமராஜ், பாலியல் நிபுணர்.

தாம்பத்யம் சிறப்பாக இருக்கிறதா?

ணவன் மனைவிக்கு இடையேயான தாம்பத்தியம் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும்.நோய் நொடி பாதிப்புகள் பக்கத்தில் வராது.

இதயம்: தாம்பத்ய உறவு செயல்பாடுகள் தொடர்ச்சியாக, மகிழ்ச்சியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக்கும்.இருதயமும் ஆரோக்கியமாக இருக்கும். 

உடல் எடை: செக்ஸில் ஈடுபடும்போது 200 கலோரிகள் உடம்பில் எரிக்கப்படுகிறது.ஒரு மனிதன் நடைபயிற்சி எந்திரத்தில் 15 நிமிடம் நடந்தால் எரிக்கப்படும் அளவுக்கு இது சமமாகும்.

வலி: இடுப்பு வலி, மூட்டு வலி, முதுகுவலி, ஒற்றைத் தலைவலி போன்றவை செக்ஸில் ஈடுபடும்போது உண்டாகும் எண்டார்பின் எனும் ரசாயனத்தினால் மட்டுப்படுகிறது.

மன அழுத்தம்: ரெகுலராக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி: தொடர்ந்து செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.

ஆயுட்காலம்: தொடர்ந்து செக்ஸில் ஈடுபட்டால் ஆயுள் நீடிக்கும்.

உலக அளவில் பல்வேறு ஆய்வுகள் சொல்லும் ஆராய்ச்சி முடிவுகள் இவை.தம்பதியர் இணக்கமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வாழ்ந்தால் இருவரின் ஆயுளும் கூடும்.குடும்பம் குதூகலமாக திகழும்.மன அழுத்தம் இருக்காது.மகிழ்ச்சி பொங்கும்.

-டாக்டர்.டி.காமராஜ், பாலியல் நிபுணர்.