பாரம்பரிய சிகிச்சை (Traditional Healing/Medicine) என்பது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் அமைந்த ஒரு மருத்துவ முறையாகும்.

இது உடலை மட்டும் குணப்படுத்தாமல், மனம் மற்றும் ஆன்மாவையும் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த சிகிச்சை முறையால் லட்சக்கணக்கான மக்கள் தினசரி பயனடைந்து வருகிறார்கள்.

கடந்த 11.03.2026 அன்று பாரம்பரிய வைத்தியர்கள் திருச்சி திருவானைக்கோவில் பழைய பைபாஸ் சாலையில்,சாலை மறியல் செய்து உரிமை மீட்பு போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

பாரம்பரியமாக சிகிச்சை அளித்து வரும் அனைவருக்கும், பாரம்பரிய சிகிச்சை செய்வதற்கு அனுமதி அளித்து, அங்கீகாரம் கொடுத்து ஆணை வழங்க வேண்டும் என்பது இவர்களின் நீண்ட நாளைய கோரிக்கை.

ஆண்டாண்டு காலமாக ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் பாரம்பரிய வைத்தியர்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்து உதவ முன் வர வேண்டும்.

-சேகர்.