
டாக்டர் நா.மங்கையர்கரசி,
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிபுணர்.அண்ணா சித்த மருத்துவக் கல்லூரி.
இன்றைய வாழ்க்கை அவ்வளவு இயல்பாக இல்லை.குழந்தை முதல் பெரியவர்கள் வரை நோய் நொடிகள் இல்லாமல் வாழ முடியாது.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நோய் பாதிப்புகள் இல்லாமல் வாழலாம்.அப்படியே பாதிப்புகள் வந்தாலும் எளிதாக வெல்லலாம்.
இயற்கை மருத்துவமே மனித சமுதாயத்திற்கு ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டி.இயற்கையான பொருட்களை பயன்படுத்தி உடல் நலத்தை மேம்படுத்தவும், நோய் பாதிப்புகளை தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுவது எளிய இயற்கை மருத்துவ முறையாகும்.
இதை மருந்தில்லா மருத்துவ முறை என்றும் சொல்லலாம்.இயற்கை பஞ்ச பூதங்களால் ஆனது.நமது உடல் நிலம், நீர்,காற்று, நெருப்பு,ஆகாயம் ஆகியவற்றால் படைக்கப்பட்டது.ஐம்பூதங்களும் இணைந்து ஒன்று சேர்ந்து கலந்து உடல் உறுப்புகளால் மனங்களில் வேலை செய்கிறது.
ஆரம்பத்தில் வருகிற பிரச்னைகளை நோயாக எடுத்துக் கொள்ளக்கூடாது.உடலில் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வாக கருத வேண்டும்.சளி, இருமல், காய்ச்சல்,தலைவலி இதெல்லாம் நோய்கள் இல்லை.ஆனால், இந்த அறிகுறிகளை உருவாக்கும் மூல காரணிகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.அதற்கு ஏற்றாற்போல் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
நமது இன்றைய வாழ்க்கை முறை மிக வேகமாகவும் அவசரமாகவும் இருக்கிறது.இதுவே நோய்கள் உருவாக காரணமாக இருக்கலாம்.தவறான உணவு பழக்கவழக்கங்கள், உடல் உழைப்பு இன்மை, உடற்பயிற்சி இல்லாமை,சோம்பலான வாழ்வியல், போதிய தூக்கம் இல்லாதது… இந்த மாதிரியான வாழ்க்கை முறையால் தான் சர்க்கரை நோய்,அதிக ரத்த அழுத்தம்,இதய நோய், உடல் பருமன், சுவாசக் கோளாறுகள்,நரம்பு பிரச்னைகள்.. வருகின்றன.
இயற்கை மருத்துவம்:
1. யோகா சிகிச்சை.
2. உணவு மருத்துவம்.
3. நிற சிகிச்சை.
4. மண் சிகிச்சை.
5. மசாஜ் தெரபி.
6. மூச்சுப் பயிற்சி.
7. அக்குபஞ்சர், அக்குபிரஷர்.
8. ரிப்லக்சாலஜி.
9. பிசியோதெரபி.
10. வாழை இலை குளியல்.
நமக்கு வரக்கூடிய நோய் பாதிப்புகளுக்கு ஏற்ப இயற்கை மருத்துவ சிகிச்சையை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த மருத்துவ முறைகளில் பக்க விளைவுகள் இருக்காது.சிகிச்சை எளிமையாக இருக்கும்.தினமும் அன்றாட வாழ்வியலோடு கடைபிடிக்கக் கூடியதாகவும் இருக்கும்.இயற்கை மருத்துவ முறையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நோய் பாதிப்புகள் வருவது மிகவும் குறைவு.நல்ல வாழ்வியல் முறைகளை தினசரி பின்பற்றி வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம்.

