டாக்டர் பி.ராதாகிருஷ்ணன்,MS(Ortho)

லுவலகங்களில் உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள்தான் இப்போது அதிக வலிகளால் அவதிப்படுகிறார்கள். முதுகுவலி, மூட்டுவலி, கைவலி, தோள்ப்பட்டை வலி, கழுத்துவலி போன்றவை உருவாகிறது. கம்யூட்ட ரில் பணிபுரிபவர்களுக்கும், எழுதிக்கொண்டே இருப்பவர்களுக்கும் ‘மீடியன் நெர்வ்’ இறுகி, கை மரத்துப்போகும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களுக்கு கண் பார்வை பாதிப்பும் தோன்றலாம். அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற தொந்தரவுகளும் உட் கார்ந்தே வேலை பார்ப்பவர்களுக்கு வரலாம்.

உட்கார்ந்தே வேலைபார்ப்பவர்கள், தங்கள் உடல் கட்டமைப்புக்கு தக்கபடியான இருக்கையில், சரியான முறையில் அமர்ந்து வேலை செய்ய வேண்டும். இருக்கை சரியாக அமைந் திருக்காவிட்டாலோ, இருக்கையில் சரியான முறையில் அமர்ந்திருக் காவிட்டாலோ முதுகுவலி, கழுத்து வலி, தோள்ப்பட்டைவலி, கைவலி ஆகிய நான்கு வலிகளும் சேர்ந்து வரும். அரைமணிநேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் அமரக்கூடாது. அவ் வப்போது எழுந்து நின்றுவிட்டு அமர வேண்டும். தினமும் முக்கால் மணிநேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

எப்போதும் ‘ஏ.சி.’யில் இருந்து வேலை பார்க்கக்கூடாது. வெயில் உடலில் பட வேண்டும்.ஏதாவது வலி தொந்தரவு இருந்தால் தாங்களாகவே தொடர்ந்து வலி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம்.மருத்துவர் ஆலோசனை பெறுவது முக்கியம்.