தெரிந்தவரோ, தெரியாதவரோ யாருக்கு எதைச் செய்தாலும், இதனால் எனக்கு என்ன கிடைக்கும் என்று யோசித்தால், வாழ்வியல், கணிதவியலாக மாறிப்போகும். எதிர்பார்த்த பொருள் கிடைக்காதபோது அந்த ஏமாற்றத்தில், மனதில் இருந்து நிம்மதி தொலைந்து போகும்.பணத்தைக் கொடுத்தவுடன் பொருள் கிடைப்பது போன்ற வியாபாரக் கணக்கு,நேசத்தோடு செய்யும் உதவிக்குப் பொருந்தாது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எதிர்பார்ப்பு இல்லாமல் நீங்கள் ஒருவருக்கு உதவி செய்தால்,அதன் பலன் உங்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் யாரிடமிருந்தாவது எந்த வடிவிலாவது வந்து சேரும்.தேவைப்படும்போது அவசரத்திற்கு எல்லோருக்கும் பாரபட்சம் இல்லாமல் உதவுங்கள்‌.உங்களுக்கு பிரச்னை வரும்போது ஓராயிரம் பேர் உதவ வருவார்கள்.

ஏனென்றால்,இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் உறுப்பினர் ஒருவருக்கு நீங்கள் உதவி செய்தால், அதை,இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு யார் மூலமாவது திருப்பிச் செய்யும்.அதற்கான பொறுப்பை பிரபஞ்சமே எடுத்துக் கொள்கிறது!