யற்கையின் எத்தனையோ அற்புதங்களில் மனித முகங்களும் ஒன்று.ஒருவரின் கைரேகையைப் போல இன்னொருவருக்கு இருப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியான குணம் உண்டு; குரல் உண்டு; மணம் உண்டு.அப்படித்தான் ஒரு முகத்தைப் போல இன்னொரு முகம் எவருக்கும் இருப்பதில்லை. ஒவ்வொரு மனிதனின் முகத்திற்கும் தனித்தனி அடையாளங்கள் உண்டு. 
 
மனித முகங்கள் பலவிதமான வடிவங்களைக் கொண்டவை என்கிறார்கள்.ஓவல், வட்டம்,பேரிக்காய், டைமண்ட்,சதுரம், இதயம் போன்று பலப்பல வடிவங்களிலும் முகங்கள் உள்ளன.
 
பெண்களுக்குப் பெரும்பாலும் ஓவல்,வட்டம்,இதயம் போன்ற வடிவங்களில் இருக்கிறது. ஆண்களுக்கு டைமண்ட்,சதுரம், ஓவல் போன்ற வடிவங்களே கம்பீரமானவை, கவர்ச்சியானவை என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் இருக்கிறது.
 
ஆண்களைவிட பெண்கள் சீக்கிரமாகவே வயதானவர்களைப் போல தோன்ற ஆரம்பித்துவிடுகிறார்கள்.அதற்கு ஒரு காரணமும் உண்டு என்கிறார்கள்.ஆண்களின் முக அளவு ஐந்து பாகம் என்றால் பெண்களுக்கு நான்குதான்.எனவே,பெண்கள் முகம் சீக்கிரமாகவே சுருங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள். 
 
நண்பர்களே…உங்களைப் போல் இன்னொருவர் இல்லை.உங்களைப் போல் இன்னொருவரை எவ்வளவு பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் உருவாக்க முடியாது என்பதுதான் உண்மை.எனவே உங்களைப் போல் இன்னொருவர் இருக்க முடியாது. நீங்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள்தான். ஒருவரைவிட ஒருவர் அழகாக இருப்பதாகவோ,கவர்ச்சியாக இருப்பதாகவோ சொல்வதெல்லாம் கற்பனைதான்.
 
ஒவ்வொரு மனிதனும் அழகானவன்தான். தனித்தன்மையானவன்தான்.அந்தத் தனித்தன்மையான உங்கள் முகத்தை பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
 
அதிகமாகப் படித்திருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும், ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் உங்களின் புன்சிரிப்பும்,மென்மையான தன்மையும்தான் உங்களை மேன்மையானவர்களாக வெளிப்படுத்தும்.உங்களுக்கு அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கும்.
 
எனவே உங்களை நீங்களே கொண்டாடி மகிழுங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.முகம் மலர்ச்சியாக இருக்கட்டும்.
– ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)