*முந்திரிப் பருப்பு சத்து நிறைந்தது. இதயத்திற்கு நன்மை தரக்கூடியது. எலும்புகளுக்கும் வலு சேர்க்கும்.புரதம், கொழுப்பு,தாதுக்கள் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஆனால்,விலை அதிகம். எல்லோராலும் வாங்கி சாப்பிட முடியாது.

*வேர்க்கடலை, முந்திரிப் பருப்பை ஒப்பிடும்போது விலை மலிவு. எல்லோரும் வாங்கிச் சாப்பிட முடியும்.

*ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் தோராயமாக 200 கலோரி இருக்கும். இது இரண்டு இட்லி சாப்பிடுவதற்கு சமம்.

*எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் வேர்க்கடலையை, குறைவாக சாப்பிடுவதே நல்லது.

*வேர்க்கடலையில் நல்லது செய்யக்கூடிய கொழுப்புச் சத்துக்கள் அதிகம்.

*சர்க்கரை நோய் உள்ளவர்களும் அடிக்கடி வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

*வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது வேர்க்கடலை சாப்பிடுகிறவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வருவதற்கான ஆபத்து வெகுவாக குறைவதாக அமெரிக்க மருத்துவ இதழ்கள் பதிவு செய்துள்ளன.

*மனிதனின் அத்தனை விதமான செயல்களுக்கும் அடிப்படை மூளை தான்.தினந்தோறும் வேர்க்கடலை சாப்பிடுகிறவர்களுக்கு மூளையின் செயல் திறன் அதிகரிப்பதோடு கூர்மையான ஞாபகத்திறன் உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

*மூளை மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

*முதுமையில் வரக்கூடிய ஞாபகம் மறதி பாதிப்புகள் வராமல் முன்கூட்டியே தடுக்கக்கூடிய சக்தி வேர்க்கடலைக்கு உண்டு.

*கடலையில் தீங்கில்லாத கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. தினந்தோறும் கடலையை பயன்படுத்துகிறவர்களுக்கு தோல் நோய்கள், சொரியாசிஸ் பாதிப்புகள் வராமல் தடுக்கப்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

*உலகம் முழுவதும் இருக்கின்ற இளம் வயது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் தலைமுடி உதிர்வது ஒரு முக்கியமான பிரச்னையாக உள்ளது. வேர்க்கடலையை ஏதாவது ஒரு விதத்தில் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு தலை முடி உதிர்வது குறையும்.முடியின் வளர்ச்சியும் அபாரமாக இருக்கும்.

*வளரும் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்துகளை வாரி வழங்கி, ஆரோக்கியமாக, உயரமாக வளர வேர்கடலை மிகச் சிறந்த உணவு.

*மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவுப் பொருளாக வேர்க்கடலையை சிபாரிசு செய்கிறார்கள்.

*மூளையில் செர டோனின் எனப்படும் வேதிப்பொருள், அதிக அளவில் சுரப்பதற்கு வேர்க்கடலை உதவுகிறதாம்.

*இந்த செரடோனின் வேதிப்பொருள் மனிதர்களின் மன இறுக்கத்தை தளர்த்தி மனம் அமைதி நிலையை அடைய பக்கபலமாக இருக்கும்.

*நோய் வருவதை தடுப்பது ஒரு பக்கம்… உடல் இளமையுடன் இருக்கவும், முதுமையை தள்ளிப்போடவும் வேர்க்கடலையை தவறாமல் சாப்பிட வேண்டும்.

பொதுவாக பாதாம், பிஸ்தா,முந்திரி பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால், வேர்க்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட சத்துகள் அதிகம் உள்ளன.நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் உண்டு. அதனால் தான் இது “ஏழைகளின் முந்திரி” என்று அழைக்கப்படுகிறது.

-பவித்ரன்,

ஹெல்த் அண்ட் பியூட்டி (Health and beauty)