ந்தூரி சமையல், நம் நாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் புதிதல்ல. 2000 ஆண்டுகளாகவே இந்த முறை நம் மக்களிடம் பழக்கத்தில் உள்ளதுதான். தந்தூரி முறையின் பிறப்பிடம் நம் இந்தியா என்றாலும் இது மிகையில்லை.
 
இந்த முறையில், மண் அடுப்புகளில் கரித் தொண்ணுகளின் மேல் வைத்து உணவைச் சமைப்பார்கள். வட இந்தியாவில், ரொட்டி, நான், சப்பாத்தி போன்ற உணவுகளை இந்த முறையில் சமைக்கிறார்கள். தந்தூரி முறையில் சமைக்கும் உணவு, நிறம், சுவை, மணம் ஆகிய மூன்று குணங்களையும் ஒருங்கிணைத்து ஊட்டச்சத்துடன் இருக்கும்.
 
தந்தூரி உணவில் தண்ணீரோ, எண்ணெய்யோ சேர்ப்ப தில்லை. பிறகு எப்படி அந்த உணவுகளில் சுவை நன்றாக இருக்கிறது என்று கேட்கலாம். மசாலாவை, தயிர் அல்லது எலுமிச்சைச் சாறில் கலந்து உணவுப் பொருள்களின் மீது தடவி சிறிது நேரம் ஊறவைப்பார்கள். அந்தச் சுவைதான் உணவுக்குள் ஊடுருவிச் சென்று சுவையை அதிகரிக்கிறது. தயிரும், எலுமிச்சைச் சாறும்,உணவின் அமிலத்தன்மையை அதிகரித்து, உணவை மிருதுவாக்குகிறது.
 
சைவ மற்றும் அசைவ உணவுகளை இந்த முறையில் சமைக்க லாம். முக்கியமாக, கோழி இறைச்சி, பன்னீர், ரொட்டி வகைகள் மிகவும் சுவையாக இருக்கும். இதில் எண்ணெய் சேர்க்கப்படாததாலும், அதிக வெப்பத்தில் சமைக்கப்படுவ தாலும், உணவில் கொழுப்புச் சத்து சேர்க்கை குறைவாக இருக்கும். இதய நோயாளிகள் இந்த உணவைத் தேர்ந் தெடுத்துச் சாப்பிடலாம்.