
டாக்டர் ரோசித்தா வெங்கட்ரமணன் பேட்டி
உடல் நலம் இல்லையா? நாடி பிடித்துப் பார்த்து நோய்களைக் கண்டறிந்தது அந்தக் காலம்.அப்போது நோய்களும் குறைவுதான்.
வாழ்க்கை முறை, அறிவியல், தொழில்நுட்பம் அனைத்தும் மாறிவிட்ட இந்தக் காலத்தில் நோய்களின் தாக்கம் அதிகம்.ரத்தப் பரிசோதனையில் தொடங்கி, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வரை பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
சாதாரண தலைவலிக்கும்,உடனே ஸ்கேன் எடு என்று சொல்லும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
நோயை கண்டறிய பரிசோதனையா, மருத்துவர்கள் வருமானத்தை பெருக்க அனாவசிய சோதனைகளா?என்ற புலம்பல் பலரிடம் உள்ளது.
சென்னை, மயிலாப்பூரில் அதி நவீன பரிசோதனை கருவியான எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் லேப் வசதிகளை அறிமுகம் செய்திருப்பவர் டாக்டர்.ரோசித்தா வெங்கட்ரமணன்.ரேடியாலஜி துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். ரேடியாலஜியில் நவீன தொழில்நுட்பங்களை கற்று அறிந்தவர். இந்தியா முழுவதும் மட்டும் அல்ல பன்னாட்டு அளவில் அறியப்பட்டவர்.ரேடியாலஜிக்கான அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்.
அட்வான்டேஜ் இமேஜிங் மற்றும் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.நமது இதழ் சார்பாக சந்தித்து பேசினோம்.ஸ்கேன் என்றாலே வீணாக,பணத்திற்காக தேவையில்லாமல் பரிந்துரைக்கப்படுகிறா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கிறது என்று கேட்டோம். அவரது பேட்டியில் இருந்து…
எங்களது ஸ்கேன் மற்றும் ஆய்வு மையத்தை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தான் தொடங்கி வைத்தார்.பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் ஆதரவோடு சமீபத்தில் ஓராண்டு நிறைவு பெற்றது.
பொதுவாக ஒரு நோயை கண்டுபிடிப்பதற்கும், அதற்கான சிகிச்சையை முடிவு செய்வதற்கும், சிகிச்சைக்குப் பிறகு நோய் குணமாகிறதா என்ற விவரத்தை தெரிந்து கொள்வதற்கும் ஸ்கேன் மற்றும் லேப் ஆய்வுகள் பயன்படுகின்றது.
எல்லா பரிசோதனைகளும் பணத்திற்கு ஆசைப்பட்டு செய்வதில்லை.சிகிச்சை அளிப்பதில் மாபெரும் முன்னேற்றங்கள் வந்துள்ளன.சிகிச்சை பெற்று நலமோடு இருப்பவர்கள் கோடான கோடி மக்கள். பரிசோதனைகள் மிக மிக முக்கியம்.
நாங்கள் நவீன தொழில்நுட்ப கருவிகளை அறிமுகம் செய்திருக்கிறோம்.தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமானதாகும்.
அதி நவீன உபகரணங்களுடன் வைடு போர் அதிவேக உயர் கிரேடியன்ட் எம்.ஆர்.ஐ.ஸ்கேன், 160 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே,இ.சி.ஜி,எக்கோ மற்றும் லேப் ஆய்வக சோதனைகள் செய்யும் அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் இருப்பது மிகப்பெரிய வசதியாகும்.
இதய நோய் தொடர்பான எல்லா சோதனைகளையும் செய்கிறோம். உதாரணமாக கொரோனரி ஆர்ட்ரி, கால்சியம் படிதல், கொலஸ்ட்ரால் படிதல், கொரோனரி ஆர்ட்ரி குறுகல் மற்றும் அடைப்பின் தன்மை, பைபாஸ் மற்றும் ஸ்டெண்ட் செயல்பாடுகள்,வால்வு சிகிச்சைக்கு முன் வால்வின் அளவு,இதயத் துடிப்பின் செயல்பாடுகள், இதயத் தசையின் தடிமன் மற்றும் ஆரோக்கியத்தை பற்றியும் விரிவான, ஆழமான ஆய்வுகளை தந்து உதவுகிறோம்.
கல்லீரல் ,வயிறு தொடர்பான ஸ்கேன் ரிப்போர்டுகளும் தருகிறோம்.குறிப்பாக கல்லீரல் கட்டிகளை கண்டறிதல், கல்லீரல் ஃபைப்ரோஸின் மதிப்பீடு, கல்லீரலில் புற்றுநோய் பாதிப்புகள்,கல்லீரல் தானம் செய்பவர் மற்றும் பெறுபவர் மாற்று அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டமிடல், கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு முன் இமேஜிங், ஆரம்பகால,தொடக்க நிலை புற்றுநோயை கண்டறிவதற்கான சிரோசிஸ் பின்தொடர்தல்,பித்த நாளம்,கணையம் குடல் மற்றும் சிறுநீரக அமைப்பு இமேஜிங்ஆகிய அனைத்து ஆய்வுகளையும் மிகச் துல்லியமாக செய்து வழங்கி வருகிறோம்.
புற்றுநோய் கட்டிகள், சிறுநீரகம்,மூளை, ஸ்பைன்,எலும்பு முறிவு,மூட்டு பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் முப்பரிமான ரிப்போர்ட்களை(3D Dimension) தருகிறோம்.
உடல் உறுப்புகளின் நோய் பாதிப்புகளை தத்ரூபமாகவும் துல்லியமாகவும் அறிந்து கொள்ள உதவுகிறோம். உதாரணமாக புற்றுநோய் கட்டிக்காக ஸ்கேன் எடுத்தால், எந்த அளவுக்கு பாதிப்பு உள்ளது?எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம்?என்று மிகச் சரியாக திட்டமிட உதவக்கூடிய ரிப்போர்ட்டுகளை தயாரித்து தருகிறோம்.
ஸ்கேன் ரிப்போர்ட் துல்லியமாக இல்லாவிட்டால் சிகிச்சையும் வெற்றிகரமாக அமையாது.தவறான சிகிச்சைக்கு கூட வழி வகுக்கலாம்.இதனால் காலவிரயம்,பண விரயம்,சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மன உளைச்சல் என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
ஒருவர் மூட்டு பிரச்சினைக்காக ஸ்கேன் எடுக்க வந்தால்,மூட்டை பரிசோதிப்பதோடு மூட்டுகளின் சந்திப்பில் இரண்டு எலும்புகளை இணைக்கும் தசை நார்கள் பாதிப்பில்லாமல் இருக்கிறதா என்பதையும் கூடுதலாக பரிசோதிப்போம்.
எந்த வகையிலாவது உடல் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடித்து சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்பதே எங்களது லட்சியமாகும்.
ஸ்கேன் எடுக்க பல இடங்களில் எல்லா உறுப்புகளுக்கும் ஒரே காயிலை மட்டுமே பயன்படுத்துவார்கள்.
நாங்கள் ஒவ்வொரு உறுப்பிற்கும் தகுந்த மாதிரி குறிப்பிட்ட காயில்களை பயன்படுத்தி ஸ்கேன் எடுக்கிறோம்.இதனால் உடல் உறுப்புகள் மிகத் துல்லியமாக தெரியும். சிகிச்சைக்கும் உதவும்.
எங்களிடம் உள்ள இந்த சிறப்பு இயல்புகள் உள்ள ஸ்கேன் மையங்கள் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கேன் எடுக்க வருபவர்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் கவனிக்கிறோம். வரவேற்பது, கலந்துரையாடுவது, தேநீர் கொடுப்பது, எப்படிப்பட்ட சிகிச்சை எடுக்கப் போகிறார்கள், எந்த மாதிரியான விவரங்கள் தேவை என்பதை திட்டமிட்டு அதற்கு ஏற்றார் போல் உதவுகிறோம்.
கேள்வி
பல இடங்களில் கட்டண சலுகைகள் தருகிறார்களே… அதில் என்ன ரகசியம் உள்ளது?
எங்களைப் பொறுத்தவரை, அதி நவீன சாதனங்களை தென்னிந்தியாவிலேயே மிகச் சிறப்பாக அறிமுகம் செய்து மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தி வருகிறோம். தேவையில்லாமல் பரிசோதனை செய்வதை நாங்கள் ஊக்கப்படுத்துவதில்லை. அது மருத்துவ அறநெறியும் இல்லை.
மற்ற ஸ்கேன் மையங்களில், ஸ்கேன் செய்யும் போது ஒரு சிலர் அச்சப்படக் கூடிய வகையில் மிக நெருக்கடியாக இருக்கும்.எங்கள் ஸ்கேன் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.அச்சமோ பீதியோ வராது.
ஆய்வகத்தில் நிபுணர்கள் பணியாற்றுவதற்கான இடம் மற்றும் நல்ல பணிச் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறோம்.நர்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்றவர்கள்.
நாங்கள் தரும் ரிப்போர்ட்டுகளில் நம்பகத்தன்மை இருக்கிறது. சிகிச்சையில் கால விரயமோ, பண விரயமோ ஏற்படாத வகையில்,எந்த வகையிலும் இழப்புகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம்.
பணவசதி இல்லாதவர்களுக்கு கட்டணச் சலுகை அளிக்கிறோம்.
சமீப காலமாக புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. உடலில் ஏதாவது அசாதாரண மாற்றங்கள் இருப்பதாக தோன்றினால், தாமதம் இல்லாமல் பரிசோதித்து பார்ப்பது அவசியம்
- எடை இழப்பு இருக்கிறதா?
- பசியின்மை இருக்கிறதா?
- மலச்சிக்கல் வயிற்றுப்போக்கு தொடர்ந்து மாறி மாறி வருகிறதா ?
- விக்கல் நிற்கவில்லையா?
- உடலில் வலி இருக்கிறதா ?
- தொடர்ந்து தலைவலி இருக்கிறதா ?
இது போன்ற அறிகுறிகள் இருந்தால் …புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்று முன்கூட்டியே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
பொதுமக்களுக்கு மருத்துவத்துறையின் விழிப்புணர்வுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றார் டாக்டர் ரோசித்தா வெங்கட்ரமணன்.
வாழ்த்துகள் சொல்லி விடைபெற்றோம்.
தகவல் தொடர்புக்கு:
730532 0444/73053 60444
சந்திப்பு:பவித்ரன், கண்ணன்.

