குழந்தைகளுக்கு உடல் நலம் இல்லையென்றால் உடனே குடல் தட்ட வேண்டும் என்று சொல்வார்கள்.இது சரியல்ல!

குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவை ஏற்படும் போது குடல் தட்டும் பழக்கம் நம்மவர்களிடையே உள்ளது. குழந்தைகள் விளையாடும்போது, கீழே விழும்போது, தவழும் போது குடல் ஏறிக் கொள்ளும் என்பதும், அதைக் கீழ் நோக்கித் தட்டி விட்டால் சரியாகி விடும் என்பதும் பழங்கால நம்பிக்கைகள்.

இதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் ஏதுமில்லை. மேலும், குழந்தை களுக்குக் குடல் ஏறிக் கொள்ள வாய்ப்பே இல்லை. ஏனென்றால் குழந்தை பிறப்பதற்கு முன்பு சில வாரங்கள் அது தாயின் வயிற்றில் தலைகீழாகத் தான் இருக்கும். அப்படியென்றால் பிறக்கும் குழந்தைகள் எல்லோருக்கும் குடல் ஏறி இருக்க வேண்டுமே?

டாக்டர்.எஸ்.வெங்கடாசலம், சாத்தூர்.