உங்கள் குடும்பம் சிறியதாக ருக்கலாம்; கூட்டுக்குடும்பமாக இருக்கலாம், பெரியதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் புன்னகையுடன் குடும்பத்தைப் போற்றுங்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவ்வப்போது மூட் மாறும் என்பதை நினைவில் வையுங்கள். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றால் சரியான வாய்ப்புக்காகக் காத்திருந்து, மற்றவர்களின் மனம் கோணாமல் மென்மையாகவும் பாந்தமாகவும் வெளிப்படுத்துங்கள். அன்பும் விட்டுக்கொடுப்பதும் உள்ள ஒரு சூழ்நிலையை உருவாக்கி மற்றவர்களுடன் நீங்கள் வளர்வதற்கு எல்லா உதவிகளையும் செய்யுங்கள்.

வயிறு வலிக்கச் சிரித்து, அன்பு தோய்ந்த குடும்பத்தில் வாழ்வது, வாழ்க்கையை கஷ்டமில்லாமல் விளையாட்டாக வாழ்வதாகும்.

எந்த சூழ்நிலையிலும் கடும் சொல்லை பயன்படுத்த வேண்டாம்.கோபத்தின் உச்சிக்கும் செல்ல வேண்டாம். பழைய கசப்பான சம்பவங்களை திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டி இடித்துரைப்பது மனதை மிக மோசமாக காயப்படுத்தும்.

அன்பையும் கனிவையும் விதைத்து மகிழ்ச்சியையும் அமைதியையும் அறுவடை செய்யுங்கள்.

-விஜயா