
டாக்டர்.சி.ஏ.ரவி, பேராசிரியர் டாக்டர்.உஷாரவி.
சிறுதானியங்களை ஏளனமாக பார்த்து அலட்சியமாக கடந்து சென்ற காலங்கள் உண்டு.தற்போது அவற்றின் அருமை பெருமைகளை அறிந்து,அவற்றைத் தேடி மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.நம் நாட்டில் சிறுதானிய புரட்சி தொடங்கியிருக்கிறது.
31 ஆண்டுகளுக்கு முன்பே,பல்வேறு ஆய்வுகள் நடத்தி,மக்களை நோய்களிடமிருந்து காக்கக்கூடிய சக்தி சிறுதானியங்களிடமே உள்ளது என்று,தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் மருத்துவமனை ஆய்வறிக்கையில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.அப்போது முதலே சிறுதானியங்களின் மகத்துவங்கள் குறித்த தொடர் விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறோம்.
சமீபகாலமாக உலக அளவில் சிறுதானியங்கள் பேசு பொருளாகியுள்ளன.இந்தியா எடுத்த நடவடிக்கை காரணமாக,இந்த ஆண்டு ‘உலக சிறுதானிய ஆண்டாக’ஐநா சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு இந்தியனுக்கும் கிடைத்த பெருமையாகும்.
சிறுதானியங்கள் சுமார் 3000 முதல் 5000 ஆண்டுகள் பழமையானவை. குதிரைவாலி, வரகு , சாமை ஆகிய சிறுதானியங்கள் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவை. சிறுதானியங்கள் பழந்தமிழர் உணவு வரலாற்றில் பெரும் பங்கு வகித்தன.நமது இலக்கியங்களில் இச்செய்திகளை அறியலாம்.
சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவு முறைகளின் ராஜாவாக கருதப்படுகிறது.நம் மூதாதயர் அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு அவர்களின் சிறுதானிய உணவு பழக்கவழக்கமே முக்கிய காரணமாக இருந்தது.அவர்கள் உட்கொண்ட அனைத்து உணவுகளுமே மருத்துவத்தை அடிப்படையாக கொண்டிருந்ததால் அவர்களை நோய்கள் அணுக முடியவில்லை.
சாதாரண மண் பகுதிகளில் கூட மிகக்குறுகிய காலத்தில் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.
வரகு
பண்டைய தமிழர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் வரகை அதிகமாக பயன்படுத்தினர்.வரகு 7 அடுக்கு தோல்களை கொண்டதால் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாமல் போனது நமக்கு வசதியாகிவிட்டது.இதனால் முன்னோர்கள் வரகை அதிகளவில் சேமித்து உணவாக பயன்படுத்தினர்.இதில் புரதம், கல்சியம், விட்டமின் பி,மற்றும் உடலுக்குத் தேவையான சக்தியை தரும் அனைத்து தாதுப்பொருட்களும் நிரம்பியுள்ளன.வரகு உடல் எடையை குறைக்கும் சிறந்த உணவுப் பொருளாகும்.
சாமை
பூச்சி இனங்கள் தாக்கப்படாத தானியம் என்ற பெருமை இதற்கு உண்டு.எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.உடல் வலி,ஆண்மைக் குறைவு ,உடற்சோர்வு போன்றவற்றை போக்கும் வல்லமை கொண்டது.சாமையில் உள்ள இரும்புச் சத்து ரத்த சோகையை அடியோடு ஒழிக்கும்.அரிசியைவிடப் பலமடங்கு நார்ச்சத்து உள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது.வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.சாமையில் உள்ள தாது உப்புகள் உயிரணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
நமது முன்னோர்கள் புட்டு, கஞ்சி ஆகியவற்றை செய்து உண்டனர். தற்போது சாமையில் சத்துமிக்க ரொட்டிகள் கேக், பிஸ்கட் ஆகியனவும் செய்யப்படுகிறது.
தினை
தினை சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது.இறடி, ஏளல், கங்கு போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.நம் முன்னோர்கள், கால்நடைகளுக்கும் உணவாக கொடுத்தனர். இதயத்தை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.இதில் இருக்கும் அதிக அளவிலான புரதம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த மருந்தாகும்.தினை மக்கள் உணவாக மக்கள் வாழ்வியலோடு இரண்டற கலந்திருந்தது.
குதிரைவாலி
தமிழர்களின் உணவில் மிக முக்கிய பங்கு வகித்தது குதிரைவாலி.நெல் பயிர்கள் விளையாத நிலங்களில் அதிகமாக இதனை பயிரிட்டனர். . இதனை வேகவைத்தும், தண்ணீரில் ஊறவைத்தும் சாப்பிட்டனர்.
கேழ்வரகு
உடல் நிலையை நோயில்லாமல் பேணுவதற்கு குரக்கன் என்று அழைக்கப்படும் கேழ்வரகை நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தினர்.
உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள்,இதய நோய்,ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்துக்கும் இது வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக உள்ளது.பிற உணவுப் பொருட்களை விட கேழ்வரகில் 300 மடங்கு கால்சியம் உள்ளது.
கம்பு
உடற்சூட்டை குறைப்பதற்கு நம் முன்னோர் கம்பை பயன்படுத்தினர். அரிசியை விட கம்பு அதிக அளவு இரும்பு சத்தினை கொண்டுள்ளது.மேலும் இதில் கால்சியம்,புரத சத்து அதிக அளவில் உள்ளன.இதிலிருந்து அடை ,கூழ், களி ஆகியவை தயாரிக்கப்படுகிறது. தமிழர் பண்பாட்டில் விருந்தினரை கம்பங்கூழ் கொடுத்தே வரவேற்றனர்.
சிறுதானியங்கள் நம் உடலுக்கு மட்டுமல்ல பயிரிடும் விவசாயிகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்கின்றன.ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய 5000 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு கிலோ சிறுதானியத்திற்கு வெறும் 300 லிட்டர் தண்ணீரே போதுமானது.
தற்போது நாடு முழுவதும் 50 சதவீத மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் எதிர்ப்பு திறன் குறைந்து பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். நம் மக்களின் சராசரி ஆயுட்காலமும் குறைந்தபடி உள்ளது.
இந்நிலையில் எளிதில் ஜீரணமாகக்கூடிய தன்மைகொண்ட சிறுதானியங்கள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது, அனீமியா நோய்(ரத்தசோகை ) வருவதை தடுக்கிறது.இதனால் நாம் ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவில் சிறுதானியங்கள் கண்டிப்பாக இருந்தாக வேண்டும்.
சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு வலிமையை தருகிறது.குறிப்பாக வயிறு தொடர்பான வாயுத்தொல்லை பிரச்சினைகளை போக்குகிறது. தானியங்களில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துகள் இருப்பதால் இளமையை சிறுதானியங்கள் பாதுகாக்கின்றன.முதுமையிலும் ஒருவரை இளைஞராக மாற்றும் திறன் சிறுதானியங்களில் உள்ளது.
சிறுதானியங்கள் இதயத்தைப் பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் உறுதுணையாக இருக்கின்றன.அரிசி, கோதுமையைவிட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து,பாஸ்பரஸ், நார்ச்சத்து,வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன.இதனால் எலும்புத் தேய்மானம்,ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிறந்தது.
குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது.
நீரிழிவு நோயாளிகள் உணவில் சிறுதானியங்களை அன்றாடம் சேர்த்துக்கொள்வதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.ரத்த ஓட்டத்தைச் சீர்செய்யவும் உதவுகிறது.கல்லீரலைச் சீராக்கும், நரம்பு மண்டலத்தையும், எலும்புகளையும் பலப்படுத்துகிறது.இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கும் இரும்புச்சத்து மற்றும் செம்பு ஆகியவை அதிக அளவில் சிறுதானியங்களில் உள்ளன.
சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது.
நார்ச்சத்து மற்றும் தாவர ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.இவை கோலான் புற்றுநோய் வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் 50% கட்டுப்படுத்துகிறது.
இயற்கையோடு இணைந்து வாழ்வதே நம் எதிர்காலம் என்று ஆகிவிட்டது.அதற்கு நமக்கு துணையாக இருப்பவை சிறுதானியங்களே. இவற்றை தவிர்த்து நாம் இனி பயணிக்கவே முடியாது.நோயற்ற வாழ்வுக்கு சிறுதானியங்களோடு உணவு கூட்டணி அமைப்பதே ஒவ்வொரு குடும்பத்திற்கும் நலம் பயக்கும். சிறுதானியங்களே இயற்கையின் இனிய பிரசாதம்.
மக்கள் நலனில் ஆர்வமுள்ள தன்னார்வளர்கள் சிறுதானியங்களை மொத்தமாக விற்பனை செய்வதற்கு விரும்பினால் எங்களை அணுகலாம்; உதவக் காத்திருக்கிறோம்.
தகவல் தொடர்புக்கு:
தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்.
எண்:11, பாரதிதாசன் தெரு ,
பிள்ளையார் கோயில் எதிரில் ,
மஞ்சக்குப்பம்,
கடலூர்-607 001.
செல் 93676 22256

