
கத்தரிக்காய் முருங்கைக்காய் வாங்குவது போல் சுரைக்காய் வாங்குவது இல்லை.இதன் பயன் பாட்டை தெரிந்து கொண்டால் இனிமேல் தவறாமல் வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள் என்று நம்பலாம்.
ஆயுர்வேதத்தில் சுரைக்காயின் மருத்துவ குணங்கள்
ஆயுர்வேத மருத்துவத்தில் சுரைக்காய் பித்தம், கபம், தோஷத்தை சமநிலையில் வைக்கும் குணம் உள்ள காயாகக் கருதப்படுகிறது. இது ரத்த திசுக்களை வலுப்படுத்தும். காய்ச்சலுக்கு மிகச்
சிறந்த நிவாரணி, தலைவலி, சோர்வு, தீக்காயம், ஆஸ்துமா, நாள்பட்ட சளி, வலிப்பு, சிறுநீரகத்தில் கல், பித்தப்பையில் கல், அதீத கொழுப்பு ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த நிவாரணி.
சுரைக்காயிலிருந்து பல மருந்துப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. மஞ்சள் காமாலை, நீரிழிவு, மூலம், ரத்த அழுத்தம், கொழுப்பு, தோல் சார்ந்த நோய்கள், காய்ச்சல், மாரடைப்பு சார்ந்த உடல் பிரச்னைகளுக்கு இது மிகச்சிறந்த நிவாரணியாகும்.
பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் இது ‘ரக்தமோக்ஷணம்’ என்று அழைக்கப்படுகிறது. காய்ந்த சுரைக்காய் ரத்த சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. சுரைக்காய் ஜூஸ், நாஸ்ய கர்மா எனப்படும் மூக்கடைப்பு உள்ளிட்டவற்றுக்கு மிகச்சிறந்த நிவாரணியாகும். சுரைக்காய் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இலை கஷாயம் மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. சுரைக்காயின் தண்டுப் பகுதியிலிருந்து தயாரிக்கப்படும் கொடி கஷாயம் ஓதம் மற்றும் பிற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.
வெளி உபயோகத்துக்கும் சுரைக்காய் மிகச்சிறந்த நிவாரணி.சுரைக்காயை அரைத்து முன் நெற்றியில் பற்று போட்டால், அதீத உடல் சூட்டினால் ஏற்படும் பித்தத்தைக் குறைக்கும். நரம்பு சார்ந்த பிரச்னைகளால் ஏற்படும் எரிச்சலைப் போக்க சுரைக்காய் கஷாயம் உதவும்.
இனிமேல் காய்கறிகள் வாங்கும்போது சுரைக்காய் வாங்க மறக்காதீர்கள்.

