-தி.செந்தில்குமார், பிசியோதெரபிஸ்ட்

தெருவில் சைக்கிள் ஓட்டினால் ஏழை; வீட்டில் ஓட்டினால் பணக்காரன்! என்ற மனப்போக்கு தான் நமது சமுதாயத்தில் உள்ளது. மிதி வண்டி ஓட்டுவது ஒரு மிகச் சிறந்த உடற்பயிற்சியாகும்.

பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகும் மோசமான பொருளாதார காலகட்டத்தில் சைக்கிளை பயன்படுத்தினால் செலவும் குறையும்;ஆரோக்கியமும் மேம்படும்.

 மிதிவண்டியை பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

  1. தினமும் அரை மணி நேரம் வாரத்திற்கு ஐந்து நாட்கள் சைக்கிள் ஓட்டினால் நல்ல பலனை அனுபவிக்கலாம்.
  1. தினமும் அரை மணிநேரம் சைக்கிள் ஓட்டுவதாக இருந்தால் வாரத்திற்கு 2000 கலோரி கொழுப்பு எரிக்கப்படும். இதனால் உடல் பருமன் உள்ள அனைவருக்கும் பொருத்தமானது என்பதை எளிதாக அறியலாம்.
  1. மிதிவண்டியை மிதிப்பதற்கு கால்களை பயன்படுத்துவதால் கால்களில் உள்ள தசைகள் வலுவடைகிறது. கால்களின் பின்புறத்தில் உள்ள இரண்டு வகையான தசைகள் நம் காலுக்கு வரும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
  1. தினமும் அரை மணிநேரம் ஓடுவதால் சுவாசம் மேம்படுகிறது. மூளைக்கு தேவையான பிராண வாயு கிடைக்கிறது. இதனால் மூளை சுறுசுறுப்படையும். தேவையற்ற பயம், பதட்டம், மன அழுத்தம் படிப்படியாக குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.
  1. மூட்டு வலி உள்ளவர்களுக்கு மிதிவண்டி பயிற்சி மிகவும் ஏற்றது. கால்களின் தசை வலுப்பெறும்போது தொடைப்பகுதியில் உள்ள தசைகள் வலுப்பெற்று எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.
  1. இடுப்பில் அதிகமாக தேங்கும் கொழுப்பை குறைக்க மிதிவண்டி பயிற்சி உதவும்.
  1. தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வந்தால் இதயத்தின் செயல்திறன் அதிகரிக்கும். மாரடைப்புக்கான ஆபத்து படிப்படியாக குறையும்.
  1. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவை படிப்படியாக குறைக்க சைக்கிள் பயிற்சி செய்யலாம்.
  1. தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வந்தால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். புத்துணர்ச்சியும் சுறுசுறுப்பும் கிடைக்கும். ஆரோக்கியமாக வாழலாம் .ஆயுள் அதிகரிக்கும்.