ள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு காலம் நெருங்குகிறது.சத்தான உணவுகளை எடுத்துக்கொண்டால் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும்.

வாரம் இரண்டு நாட்களுக்கு மதிய உணவில் பிரண்டைத் துவையல், வல்லாரைத் துவையல் சேர்த்து வந்தால் செரிமானத்துக்கும் ஞாபக சக்தி அதிகரிப்பதற்கும் உதவும்.மாலை நேரத்தில் சுண்டல், பயறு, பொட்டுக்கடலை,
வெல்ல மிட்டாய், கடலை மிட்டாய், அதிரசம், எள்ளுருண்டை, காய்கறியும் பழங்களும் கலந்த சாலட் சாப்பிட்டால், தேநீர், காபிக்குப் பதிலாக பழச்சாறு குடித்தால், உடல் பருமன் வருவது தடுக்கப்படும்.மேலும் இவற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம் என்பதால், இரவில் பாடங்களைப் படிப்பதற்குத் தேவையான ஆற்றலையும் பெறமுடியும்.