
1. நாம் பிரிட்டிஷ் & ஆங்கிலேயரது அடிவருடிகளாகவே இருந்து வந்த காரணத்தினால் நம் சுய அறிவை இழந்து அவர்கள் முறையையே பின்பற்றுகிறோம். இம்முறைதான் நம் பல்கலைக்கழகங்களில் செயல் வடிவில் இருப்பது. ஐந்தாண்டு காலம் பட்டப்படிப்பை முடித்த பின்பு ஒரு வழிகாட்டி ஆசிரியரைக் கொண்டு பதிவு செய்து கொண்டு மூன்றாண்டு காலம் ஆய்வு செய்ய வேண்டும். குறைந்தது ஐந்தாண்டு காலத்தின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை 250 பக்கங்களில் எழுதி சமர்ப்பிக்க வேண்டும். இதனை உள்நாட்டு வெளிநாட்டு துறைசார்ந்த பேராசிரியர்கள் மதிப்பீடு செய்து பட்டம் வழங்க சிபாரிசு செய்வார்கள். பின்பு ஒரு பொதுவான VIVA VOCE நடத்தப்பட்டு முனைவர் பட்டம் வழங்கப்படும். இப்பட்டம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் தகுதி உடையது.
2. இன்னும் ஒருவகையில் படிப்பும், தேர்வும் ஆய்வும் சேர்ந்து பெறுவது. இதுவும் மூன்றாண்டு கால அவகாசத்தில் அளிக்கப்படுகிறது. இதனையும் அனைத்து துறையினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
3. இம்முறையில் மற்ற முதுநிலை படிப்பு போல தேர்வு எழுதி பட்டம் பெறுவது. இதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் படிப்பு தேவை. இவ்வகையில் பெறும் ஆய்வுப்பட்டமும் தகுதி வாய்ந்தது. பணிகளில் சேரவும் பல்கலைக்கழகத்தில் பணியாற்றவும் அங்கீகாரம் கொண்டது.
4. இம்முறை புதுமையானது. வாய்வழித் தேர்வும், சவால் விடும் அளவிற்கு கேள்விக் கணைகளுக்கு விடையளிக்கவும் தகுதியாக இருக்க வேண்டும். இதற்கு பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் கூட கிடையாது. ஒரு தேர்வு கமிட்டி முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு திருப்திகரமாக விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வகையில் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களும் பட்டங்களை அளிக்கின்றன. எந்தத் துறையில் முனைவர் பட்டம் தேவையோ அந்தத் துறையில் அனுபவமும், பாண்டியத்துவமும், புலமையும் பெற்றிருக்க வேண்டும். இப்பட்டம் கல்வித்துறையில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதனை மூன்று மாதங்களில் பெறலாம்.
5. மதிப்பீடு, குறிப்பீடு வகை கணிப்பு முறை என்பதாகும். முழுமையான தன்னிலை நிரல், கல்வி, அனுபவம், ஆய்வு, மற்ற திறமைகளை உள்ளடக்கிய பட்டியலைக் கொடுத்து, அதற்குரிய நிபுணர்கள் ஆய்வு செய்து, மதிப்பிட்டு பட்டம் வழங்குவார்கள். இதற்கு குறைந்தது மூன்று ஆண்டுகால துறைசார்ந்த அனுபவம் தேவை. அதனை ஓராண்டு கல்வித் தகுதியாக கருதி பட்டம் வழங்குவார்கள். இம்முறை பிரான்சு, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவில் உள்ள சில பல்கலைக்கழகங்களிலும் உள்ளது. இப்பட்டம் வேலைவாய்ப்பிற்கு உறுதுணையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனை மூன்று அல்லது ஆறு மாத கால அளவில் முடிக்கலாம்.
6. மதம் சார்ந்த ஆய்வுப் பட்டங்கள். இதனை பெரும்பாலும் கிறித்தவ ஆலயங்கள் வழங்குகின்றன. இதற்கென சில பிரத்தியேக ஆலயங்கள் உள்ளன. அவை D.DIV. D.TEOLOGY, D.LIT போன்ற பட்டங்களை வழங்குகின்றன. இவை மதம் சார்ந்த அல்லது சமூகம் சார்ந்த சேவைகள் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து கவுரவிக்கப்படுகிறது. இவை சமூக அந்தஸ்தை அளிக்கின்றன.
7. கவுரவ முனைவர் பட்டங்கள். ஒருவரது சமூக சேவை, அர்ப்பணிப்பு, சட்டத்திற்குட்பட்ட அனுபவங்களைப் பெற்றிருப்பது ஆகியவற்றின் அங்கீகாரமாக வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் உயர் பதவி வகிப்பவர்களை கவுரவப்படுத்த இத்தகைய டாக்டர் பட்டங்களை வழங்கி பெருமைப்படுத்துகின்றன. இத்தகைய பட்டங்கள் சட்ட நெறிகளுக்கு உட்பட்டிருப்பதால் இதனை எதிர்த்து வழக்கிட முடியாது. சமூக அந்தஸ்திற்காக கொடுக்கப்படும் டாக்டர் பட்டங்கள் இவ்வகையில் சேரும்.

