ங்கும் எப்போதும் அரிசி சார்ந்த உணவுகளையே சாப்பிட்டு பழகிவிட்டோம்‌.அரிசி தவிர்த்து மற்ற உணவுகளையும் தவறாமல் சாப்பிட பழக வேண்டும்‌.அப்போது தான் எல்லா வகையான சத்துகளும் கிடைக்கும்.

அந்தவகையில் சோளத்திற்கு அதிக முக்கியத்துவம் தரலாம்.

மாவுச்சத்து, பரதம் மற்றும் கொழுப்புச் சத்துக்களுடன் சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, நியாசின் மற்றும் தயமின் போன்ற சத்துகள் சோளத்தில் உள்ளன.இது உடலுக்கு உறுதி சேர்க்கும்,செரிமானக் கோளாறு,நீரிழிவு நோய்,ரத்தசோகை, உடல் பருமன்,அல்சர், எலும்பு தேய்மானம் போன்ற பாதிப்புகளுக்கு நல்ல மருந்தாகச் செயலாற்றும்.

அதுவும் நாட்டுச் சோளம்தான் இத்தகைய சத்துகளை சீரான அளவில் கொண்டுள்ளது.எந்த வகையான மண்ணிலும் செழிப்பாக வளரும் சோளத்தில் செய்யப்படும் சுண்டல் சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். சோளத்தை தோசையாக தயாரிக்கும்பொழுது நீர் தெளித்து மிக்ஸியில் அரைக்க உமி தனியாக வரும். அவற்றைப் புடைத்து நீக்கிவிட்டு சிவப்பரிசியுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்தெடுக்கவும்.

பிறகு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி,உப்பு சேர்த்து தோசையாக வார்த்தெடுக்கவும். சோள அவலிலும் உப்புமா அல்லது தேங்காய்க் கருப்பட்டி சேர்த்து அத்துடன் பாலும் சிறிது சேர்த்து மென்மையாக்கி நன்கு ஊறிய பின் உண்ணலாம். சோளத்தை உமி நீக்கி உப்புடன் சேர்த்து வேகவைத்து சோறாகவும் உண்ணத் தகுந்ததாகும்.