கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார்,
MBBS,MCIP,PG.Dip. Diabetology,F.C.G.P.

தானத்தில் சிறந்தது எது?என்று கேட்டால்…பலரும் “அன்னதானம்”என்று சொல்வார்கள்.

நமது நாடு பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
ஒரு மருத்துவராக… தானத்தில் சிறந்தது “ரத்த தானம்”என்று சொல்வேன்.
இந்தியாவில் ரத்த தானம் செய்பவர்கள் ஒரு சதவீதம் மட்டுமே.இது நிச்சயமாக போதாது.
ரத்தம் கிடைப்பது என்பது பெரிய பிரச்சனையாக உள்ளது.ரத்தம் தாராளமாக கிடைத்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க முடியும்.

நல்ல எண்ணம் கொண்ட பெரும் பணக்காரர்கள்கூட பொன்னைக் கொடுக்கத் தயார். பொருளைக் கொடுக்கத் தயார். மண்ணைக் கொடுக்கவும் தயார். ஆனால்,தனது உடலில் இருந்து எந்தப் பொருளையும் கொடுக்க விருப்பப்படுவதில்லை.’மனமிருந்தால் மார்க்க முண்டு’ என்ற சொல்லுக்கேற்ப ரத்ததானம் செய்வதற்கு மனம் சம்மதித்தால் போதும்.வயது ஒரு தடையே இல்லை.

ரத்ததானம் அதிகம் புழக்கத்தில் இருக்கக்கூடிய அமெரிக்கா, ஜெர் மனி, கனடா, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் திரவ ரத்தப் பொருளாகிய ‘பிளாஸ்மா’ விற்க, வாங்க இருக்கின்ற வியாபாரச் சந்தைகளில் பல பில்லி யன் டாலர் மதிப்பிலான பணப் பரிமாற்றம் நடைபெறுகின்றன. ஆக, இது வும் ஒரு மிகப் பெரிய வியாபாரமாகத்தான் மேற்கூறிய நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றது.
ரத்த வங்கிகள் நமக்கு எதுவும் காசு தராமல்,நம்மிடம் இலவசமாக எடுத்துக் கொண்டு, பின் அந்த ரத்தத்தை அவர்கள் நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள் என்ற தவறான எண்ணம்தான் பலரிடம் இருக்கிறது. காசு கொடுத்தோ அல்லது இலவசமாகவோ ரத்தத்தை ஒருவரிடமிருந்து வாங்கி இன்னொருவருக்கு காசுக்கு விற்பது என்பது நடைமுறை சாத்தியம் கிடை யாது.அப்படி வாங்கி விற்கக்கூடிய அளவுக்கு ரத்தம் ஒருமிகப்பெரியகிராக் கியான பண்டமாற்று பொருளும் அல்ல. தேவைப்படவில்லை என்றால் ரத்தத்தை விலை கொடுத்து வாங்கி ஸ்டாக்கில் வைக்க யாரும் முன் வர மாட்டார்கள். தேவைப்படுகிறது என்றால் எந்த விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயார். ஏனெனில் ரத்தம் உயிர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.

எல்லா மருத்துவமனைகளிலும் ரத்த வங்கிகள் இருப்பதில்லை.சில மருத்துவமனைகளில்தான் இருக்கின்றன. ரத்தம் அவசரமாகத் தேவைப்படும்போது மற்ற மருத்துவமனைகளிலிருந்து ரத்தம் வாங்கிக் கொள்வது வழக்கமே.

சில நாடுகளில், சிலபேர் அவசரத்துக்கு ரத்தத்தை தானமாகக் கொடுத்து விட்டு, நம்மூர் பணத்திற்கு சுமார் ரூபாய் 6,000 க்கு மேல் வாங்கிக் கொள்கிறார்கள்.

பணத்துக்காக ரத்தத்தை விற்றாலும் சரி, ரத்தத்தை வாங்கினாலும் சரி. அது மிகப்பெரிய தவறுதான்.இந்தச் செயலை,நாம் அனுமதிக்கவும் கூடாது;ஆதரிக்கவும் கூடாது.ரத்தம் அவசரமாக, அவசியமாக தேவை என்ற ஒரு காலகட்டத்தில், மாதவிடாய் நேரங்களில் பெண்கள் ரத்ததானம் செய்யலாமா என்று நிறைய பேர் மருத்துவமனைகளில்,ரத்த வங்கிகளில் கேட்கிறார்கள். ரத்ததானம் செய்யலாம். தவறில்லை.ஆனால் அவர்களது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு 11 சதவீதத்துக்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும்.

கொஞ்சம் வலி, கொஞ்சம் உடல் சோர்வு,கொஞ்சம் களைப்பு,இவைக ளையெல்லாம் தாங்கக்கூடிய சக்தி, அந்தப் பெண்ணின் உடலுக்கு இருந் தால்,மாதவிடாய் ஒரு பிரச்னையில்லை. இருப்பினும் மாதவிடாய்க்கு ஒரு 3 வாரத்துக்குப் பிறகு ரத்ததானம் செய்வது நல்லது.

மது அருந்தியிருக்கிறேனே,ரத்ததானம் செய்யலாமா? என்பது சிலரின் கேள்வி.ரத்ததானம் செய்வதற்கு 24 மணி நேரம் முன்பு வரை மது அருந்தி இருக்கக்கூடாது.

ரத்ததானம் செய்தால்,உடலில் எடை கூடுமா, குறையுமா? கண்டிப்பாக கூடாது. ரத்ததானம் செய்து உடலில் குறைந்துபோன ரத்தத்தை ஈடு செய்ய,மற்ற நேரங்களைவிட இந்த நேரத்தில் சற்று அதிகமான கலோரி சக்தியை உடலிலிருந்து இழக்க நேரிடும். மற்றபடி உடல் எடை கூடவோ,குறை யவோ வாய்ப்பில்லை.

சிகரெட் புகைப்பவர்கள் ரத்ததானம் செய்யலாமா? நாகரிகம் நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் சிகரெட் உபயோ கிப்பவர்கள் ரத்ததானம் செய்யக் கூடாது என்று சொல்லிவிட்டால் ரத்தம் கிடைப்பது மிகப்பெரிய அளவில் குறைந்துவிடும். எனவே சிகரெட் புகைப்பவர்கள் ரத்ததானம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் முன்பும்,ரத்ததானம் செய்தபிறகு குறைந்தது இரண்டு மணி நேரமாவது சிகரெட்டை உபயோகிக்காமல் இருப்பது நல்லது.

ரத்ததானம் செய்வது இருதயத்துக்கு நல்லதா கெட்டதா? தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ரத்ததானம் செய்துகொண்டு வந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகாமலும் மாரடைப்பு வராமலும் இருக்க வாய்ப்புண்டு என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

ரத்ததானம் செய்வது கல்லீரலுக்கு நல்லதா? சில கல்லீரல் நோய்களுக்கும் உடலில் அதிக அளவில் இரும்புச் சத்து இருப்பதற்கும் தொடர்பு உண்டு என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ரத்ததானம் செய்யும்போது கல்லீரலில் இருக்கும் இரும்புச்சத்தினுடைய இருப்பு குறைந்து கல்லீரல் ஆரோக்கி யமாக வேலை செய்ய வாய்ப்பு அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதிகரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாமா? நன்றாக தூங்கியிருந்தால், நன்றாக சாப்பிட்டிருந்தால், நிறைய தண்ணீர் குடித்திருந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்போது இவர்கள் ரத்ததானம் செய்வதில் தவறில்லை.

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரத்ததானம் செய்யலாமா? செய்யலாம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு வேறு நோய்கள் எதுவும் இல்லாமல் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக வாழ்ந் துகொண்டிருக்கும் சர்க்கரை நோயுள்ளவர்கள் கண்டிப்பாக ரத்ததானம் செய்யலாம்.

ரத்ததானம் செய்துவிட்டு தனியாக வீட்டுக்கு ஸ்கூட்டர் அல்லது கார் ஓட்டிக்கொண்டு செல்லலாமா? ரத்ததானம் செய்தபின் சில நேரங்களில் சில பேருக்கு மயக்கம் வருவதுண்டு. எனவே தனியாக ஸ்கூட்டர்,கார் ஓட்டிச் செல்வதைத் தவிர்க்கவும்.

ஒருவர் எத்தனை முறை ரத்ததானம் செய்யலாம்?

ஒரு ஆண்டில் சுமார் 3 அல்லது 4 முறை ஒருவர் ரத்ததானம் செய்யலாம்.மேலும் ரத்தத்திலுள்ள பிளாஸ்மா திரவத்தை மட்டும் ரத்தத்திலுள்ள பிளேட்லெட் அணுக்களை மட்டும் மாதத்திற்கு ஒரு முறை கூட தானமாகக் கொடுக்கலாம்.

18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாமா?
65 வயதுக்கு மேலுள்ளவர்கள் ரத்ததானம் பண்ணலாமா?

எனக்கு இன்னும் 18 ஆக வில்லை. ஆனால் எனக்கு ரத்ததானம் செய்ய மிகவும் ஆசையாக இருக்கிறது.எனக்கு 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டது.ஆனால் எனக்கு ரத்ததானம் செய்ய ஆசையாக இருக்கிறது.நாங்கள் ரத்த தானம் செய்யலாமா? என்று தினமும் நாலுபேர் ரத்த வங்கிகளுக்கோ மருத்துவமனைகளுக்கோ வந்து விசாரித்தால் அதற்கேற்றபடி அன்புடன் அவர்களை வரவேற்று பரிசோ தித்து பதில் சொல்லலாம்.

ஆனால் ரத்ததானம் செய்ய நான் ரெடி என்று தானாகவே முன்வந்து யாருமே கேட்டு வரவில்லையே? வருவதில்லையே? எல்லாரும் ஓடி ஒளியத்தானே செய்கிறார்கள். ரேஷன் கடைக்கு ரேஷன் பொருள்கள் வந்துவிட்டதா? என்று பலமுறை சளைக்காமல் போய் கேட்டுவிட்டு
திரும்பி வருபவர்கள் ஒரே ஒருமுறையாவது ரத்த வங்கிக்குப் போய் ரத்த தானம் செய்யலாமா என்று கேட்கலாமே?

ரத்ததானம் செய்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சளி,இருமல், காய்ச்சல், ஜலதோஷம், மூக்கில் நீர் வடிவது, தொண்டையில் வலி, எச்சில் விழுங்க முடியாமல் போவது போன்ற அறிகுறிகள், தொந்தரவுகள் உடலில் இருந்தால், ரத்ததானம் செய்வதைத் தள்ளிப் போடுவது நல்லது.

பட்டினியாய் இருந்து வெறும் வயிற்றில் இருக்கும்போது ரத்ததானம் செய்யப் போகாதீர்கள். குறைந்தது அரை லிட்டர் தண்ணீர் அல்லது பழ ஜூஸ் ஏதாவது குடித்துவிட்டு ரத்ததானம் செய்வது நல்லது.

ரத்ததானம் செய்தபிறகு இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களாகிய கீரை சூப், காய்கறிகள் சூப், பழஜுஸ்,பாதாம், பிஸ்தா,முந்திரி, வேர்க்கடலை,மீன், இறைச்சி போன்ற உணவுப்பொருள்களை மாற்றி மாற்றி தினமும் உண்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும். உடலுக்கும் தெம்பு கிடைக்கும்.புது ரத்த அணுக்கள் உற்பத்தியாவதற்கும் ஹீமோகுளோபின் அதிக அளவில் உற்பத்தியாவதற்கும் இரும்புச்சத்து அதிகமாகத் தேவை. எனவே இரும் புச்சத்தும் புரதச்சத்தும் அதிகமுள்ள உணவுப் பொருள்களை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி ரத்ததானம் செய்பவர்கள் அதிக ஆயுளுடன் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. எனவே அடிக்கடி ரத்ததானம் செய்யுங்கள்.அதிக ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழுங்கள்.