
தினசரி கேரட் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்.பச்சையாக மென்று தின்பது பற்களுக்கும் நல்லது. தினம் அப்படி சாப்பிட முடியாதவர்களுக்கு சில டிப்ஸ்…
* கேரட்டை ஜூஸாக செய்து கொள்ளுங்கள். தினமும் ஏதோ ஒரு ஜூஸ் குடிக்கிற பழக்கம் உள்ளவர்கள் என்றால், எந்த ஜூஸ் உடனும் சிறிது கேரட் ஜூஸும் கலந்து குடிக்கலாம்.
*கேரட்டை மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொண்டு, அதை பிரெட், சப்பாத்தி, தோசை மேல் தடவிக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
* கேரட்டை தீக்குச்சிகள் மாதிரி மெலிதாகவோ, வட்ட வில்லைகளாகவோ நறுக்கி, உப்பு, மிளகுத்தூள் தூவி உணவு இடைவேளைகளுக்கு இடையில் கொறிக்கலாம்.
* கேரட்டிலுள்ள காரத்தன்மை குணமானது,ரத்தத்தை சுத்திகரித்து, ஊட்டமேற்றுகிறது.
* உடலின் அமில – காரத்தன்மையை சம நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
* கேரட்டில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ஹைப்பர் டென்ஷனை குறைக்கிறது.
* கேரட்டில் உள்ள நார்சத்தானது, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது.கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பு அதிகரிக்க உதவுவதன் மூலம் இதய நோய்கள் தவிர்க்கப்படுகின்றன. கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளோருக்கு கேரட் சிறந்த உணவு.
* பச்சை கேரட்டை மென்று தின்பதன் மூலம் வாயிலுள்ள கிருமிகள் அழிவதுடன், பற்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
* உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து, செரிமானத்துக்குத் தேவையான தாதுக்கள், வைட்டமின்களையும் தூண்டுகிறது.
* வயிற்றுப் புண்களை ஆற்றுகிறது.
* கேரட்டில் உள்ள கேரட்டினாயிட்ஸ், ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
* கேரட்டில் உள்ள நுண் ஊட்டச் சத்தானது, புற்று நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
* மிகவும் குறைவான ரத்தப்போக்கு உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்தப்போக்கு சீராகும்.
* சிறு வயதிலிருந்தே கேரட் சாப்பிட்டுப் பழகுகிறவர்களுக்கு பிற்காலத்தில் பார்வைக் குறைபாடுகள் வரும் வாய்ப்புகள் குறைவு.

