ருத்துவத்திலும், அறிவியலிலும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இந்திய பாரம்பரியத்தில் காலம் காலமாக நிரூபணமான ஓர் உண்மை இருக்கிறது. 

தனிக் குடும்பத்தைக் காட்டிலும், கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களுக்கு இதய பாதிப்புகள் வரும் வாய்ப்பு சற்று குறைவு.ஏனென்றால் உறவுகளுடன் புடை சூழ இருப்பவர்களுக்கு மன உளைச்சலும், உளவியல்ரீதியான தாக்கங்களும் தீவிரமாக இருப்பதில்லை.

குடும்பத்தில் எவருடனாவது பிரச்னை என்றால் கூட அதனை சொல்லித் தீர்க்க கூட்டுக் குடும்பத்தில் மற்றொரு உறவு இருக்கும். அதேவேளையில், தனிக் குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளை பகிர்ந்து கொள்வதற்குக் கூட பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.

இதனால், மன அழுத்தம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து ரத்த அழுத்தம், இதய பாதிப்பு என நோய்கள் நம்மை படையெடுக்கலாம். கூட்டுக் குடும்பத்தில் ஒரு உறவால் மன அழுத்தம் ஏற்பட்டாலும், மற்றொரு உறவு அதற்கு நோய் எதிர்ப்பு மருந்தாக இருக்கும்.

சிறு குழந்தைகளுக்கு முதியோர்கள் நல்ல வழிகாட்டியாக திகழ்வார்கள்.தம்பதியர் தவறு செய்தால் ஒழுங்குபடுத்தி நல்வழிப்படுத்த யாராவது இருப்பார்கள்.

குடும்பத்தில் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும்.எதிர்காலம் பற்றிய பயம் அவ்வளவாக இருப்பதில்லை.

இன்றும் கிராமங்களில் கூட்டுக் குடும்பங்களை பார்க்கலாம்.சித்தப்பா பெரியப்பா, தாத்தா பாட்டி என சொந்த பந்தங்களோடு வாழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை.முதியோர் இல்லம் தேவைப்படாது.

டாக்டர் ஆர்.பரமேஸ்வரன், உளவியல் ஆலோசகர், மும்பை