காய்கறிகளிலேயே மிகவும் உன்னதமான ஒன்று கேரட்.அத்தனை வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டது.கேரட்டை கழுவி, தோல் சீவாமல் அரைத்து, சர்க்கரை சேர்க்காமலும், வடிகட்டாமலும் அப்படியே குடிக்கலாம்.தினம் கேரட் ஜூஸ் குடிப்பவர்களுக்கு….

* ரத்த சோகை சரியாகி,ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.

* சுவாசப் பிரச்னை சீராகும்.சளியும் தொண் டைக்கட்டும் குணமாவதுடன்,ஆஸ் துமாவுக்கு காரணமான தொற்றைத் தவிர்க்கும்.

* கேரட்டுடன், கொஞ்சம் கொத்தமல்லியும் சேர்த்து அரைத்துக் குடித்தால், எப்பேர்ப்பட்ட மலச்சிக்கலும் சரியாகும் .

* கர்ப்ப காலத்திலும், மாதவிடாய் நாட்களிலும் கேரட் ஜூஸ்
குடிப்பதால்,உடலிலுள்ள அதிகப்படியான தண்ணீர் தேக்கம்
சரியாகி, உடல் லேசான உணர்வு பெறும். கர்ப்பத்தின் கடைசி மாதங்களில் கேரட் ஜூஸ் குடிப்பதால், பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஆபத்துகூட குறையுமாம்.

* குழந்தையின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டோர், தினமும் கேரட் ஜூஸ் குடித்தால், அவர்களது இனப்பெருக்கத் திறனானது மேம்படும்.

* கேரட்,சருமத்தை மென்மையாக்கும்.சுருக்கங்கள் மறையும்.இளமை தோற்றம் ஏற்படும்.