ன்றைய தேதியில் மருத்துவ சிகிச்சை செலவுகள்,மருந்து, மாத்திரை செலவுகள், மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், அறுவைசிகிச்சை கட்டணம் ஆகியவை மிகவும் அதிகமாக இருப்பதால், அனைவரும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகிறது.திடீர் விபத்து, தீவிர உடல் நலக்குறைவு போன்றவற்றால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது ஏற்படும் லட்சக்கணக்கான மருத்துவச் செலவை சமாளிக்க உதவும், நிதி பாதுகாப்புதான் மருத்துவக் காப்பீடு.

விபத்து, மாரடைப்பு போன்றவற்றால் திடீர் மருத்துவச் செலவு ஏற்பட்டால், மாதச் சம்பளம் வாங்கும் பலரால் உடனடியாகப் பெருந்தொகையைத் திரட்ட இயலாது.உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்குபவர்கள், சொத்து, நகைகளை அடமானம் வைத்து நிலைமையை சமாளிப்பவர்களும்,சேமிப்பு பணத்தை
மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்துபவர்களும் அதிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் ஆகின்றன.மருத்துவக் காப்பீட்டை குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரிலும் கட்டாயம் எடுக்க வேண்டும்.

இளம் வயது, ஆரோக்கியமாக இருக்கிறேன்.மருத்துவக் காப்பீடு தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள்.

மன அழுத்தம் நிறைந்த இன்றைய கார்ப்பரேட் வேலை மற்றும்
வாழ்க்கைமுறை,சுற்றுச்சூழல் மாசு, கலப்பட உணவு போன்றவற்றால் நல்ல உடல்நலத்துக்கும் வயதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்றைய பெரும்பான்மையான இளைஞர்கள் பணிச்சுமை, மன அழுத்தம், உடல் பருமன் பிரச்னை போன்றவற்றால் நோய்வாய்ப்பட்டு உள்ளனர்.மேலும், விபத்து என்பது எந்த வயதினருக்கும் ஏற்படக்கூடும்.நாம் சாலையில் மிகச் சரியாக வாகனம் ஓட்டிச் சென்றாலும் எதிரில் வருபவர்கள் அல்லது நம் பின்னால் வருபவர்கள் அப்படி வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. எனவே, இளம் வயதாக இருந்தாலும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியமாகும்.

-டாக்டர்.ஜி
ராஜமோகன்