28 வருடங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.. சாதித்தவர்களுக்கும், சாதித்துக் கொண்டுள்ளவர்களுக்கும் மட்டுமே உணரும் ஓர் புதுமொழி!

டாக்டர் சி.ஏ.ரவி சிறு, குறு தானியங்கள், மூலிகை என 28 வருடங்களாக புதிய புதிய ஆய்வுகளை செய்து கொண்டிருப்பவர்.

இன்றைக்கு அக்குபஞ்சர் சிகிச்சையாளர்களுக்கான அங்கீகாரம் முதன் முதலாக 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் வழியாக வழங்கப்பட்டதற்கு, கவுன்சில் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் அமைப்பின் 1996ம் ஆண்டில் முதல் எடுத்த முயற்சிக்கான வெற்றி. அது டாக்டர் ரவி முன்நின்றார் எனலாம்.

மத்திய அரசின் அரசிதழில் கவுன்சில் ஆஃப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் அமைப்பின் ‘போர்டு ஆஃப் டைரக்டர்’&ஐ வெளியிட்டதுடன், அக்குபஞ்சர் நிபுணர்களுக்கு இந்தியாவில் ஜம்மு&காஷ்மீர் தவிர எங்கு வேண்டுமானாலும் பிராக்டிஸ் செய்யலாம் என வெளியிட்ட பெருமையும கவுன்சில் ஆஃப் இந்தியன் அக்குபஞ்சரிஸ்ட் அமைப்பையே சாரும்.

அக்குபஞ்சர் என்ற சேவை மட்டுமின்றி மத்திய அரசின் SSI இன்றைக்கு MSMS மற்றும் மத்திய அரசின் K-VIC , BSS தமிழக அரசின் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் போன்றவைகளுடன் இணைந்து மூலிகை வளர்ச்சி, மூலிகை பாதுகாப்பு, மூலிகை பொருட்கள் தயாரித்தல் என பல சேவைகளை தொடர்ந்து செய்து கொண்டுள்ளார்.

VEE HERBAL CARE (P) LTD., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனராக இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மூலிகை சார்ந்த பொருட்களை தயாரிக்க ஆலோசனையும், மூலப் பொருட்களின் விகிதாசாரங்களையும் வழங்கிக் கொண்டுள்ளார். மேலும் ‘V-ஹெர்பல் கேர்’ நிறுவனமானது அரசின் BSS மற்றும் தனியார் GMP, ISO சான்றிதழ்களுடன், மத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம் மூலமாக K-VIC சான்றிதழும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மத்திய கதர் வாரியத்தின் மத்திய கதர் வாரியத்தின் செயலாளர் பார்வையிட்டு நிறுவனத்தை பாராட்டினார்.

மூலிகை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் மூலமாக பல ஆயிரம் பேர் டாக்டர் ரவி மூலமாக பயன் பெற்றுள்ளார்கள். தொடர்ச்சியாக விவசாயிகளை சந்தித்து மூலிகை பயிரிட ஆலோசனை வழங்குவதுடன் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் அதிகபட்சமாக 75 சதவீதம் வரை உள்ள தகவலையும், அதை பெறும் முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்.

இவரது குடும்பமே மாற்று மருத்துவ குடும்பம் எனலாம். டாக்டர் ரவி பாரம்பரிய மருத்துவர், அவரது துணைவியார் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மூலமாக இயற்கை மருத்துவ நிபுணர். மகள் BAMS எனும் ஆயுர்வேத மருத்துவர். மற்றும் இவருடன் BHMS, MDS, BHMS,MBBS மருத்துவர்களும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது பாராட்டப்பட வேண்டிய செய்தி.
மேலும் புதுச்சேரியில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களின் சங்கத் தலைவராக உள்ளார்.

இவரை வைத்து முன்னேறியவர்கள் இன்றைக்கு தமிழகத்தில் பலர் உண்டு. என்றாலும் இவர் அதைப்பற்றி பேசுவதில்லை என்பதே இவரின் தனிப் பெருமை.
மாற்று மருத்துவ சட்டங்கள், வழிகாட்டுதல்கள், அரசாணை என ஓர் தனியறையில் பலதரப்பட்ட சட்ட ஆணைகளை பாதுகாத்து வைத்துள்ளார். மாற்று மருத்துவ சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள் இன்றைக்கும் இவரை சந்தித்து ஆலோசனைப் பெறுவது இவரின் திறமைக்கும், மாற்று மருத்துவத்தின் மேல் வைத்துள்ள பற்றும் புலப்படுத்துகின்றது.
சுமார் 200க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ள டாக்டர் சி.ஏ.ரவி அவர்கள் அமைதியாக இருப்பது அதிர்ச்சியைத்தான் தருகின்றது. சுமார் 20க்கும் மேற்பட்ட சித்தா மற்றும் ஆயுர்வேதா, ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்கள், மூலிகை உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் உள்ளார்.

அரிமா சங்கம், சாலை பாதுகாப்பு அமைப்பு, பத்திரிகை துறை, கடலூர் நகர அரங்கம், கல்வி அறக்கட்டளை என சுமார் 40க்கும் மேற்பட்ட அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.
பாரம்பரிய மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக 28 வருடங்களாக தொடர்ந்து சேவை செய்து வருகின்றார். பல்வேறு பாரம்பரிய மருத்துவ அமைப்புகளின் தேவைகளை சட்ட ரீதியாக வழிகாட்டிக் கொண்டுள்ளார்.

மாற்று மருத்துவம் சம்பந்தப்பட்ட சட்ட விவரங்கள், மருந்துகள் உற்பத்தி நிறுவனம் துவங்கிட ஆலோசனை மற்றும் மானியத் திட்டத்துடன் கடன் பெறும் முறை, மூலிகை பயிரிடுதல் FSSI மூலிகை உணவுப் பொருட்கள் தயாரித்தல் பாரம்பரிய சிறு,குறு தானியங்களை பயிரிடுதல் உள்ளிட்ட பலதரப்பட்ட சந்தேகங்களுக்கும் எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம் என டாக்டர் ரவி கூறியபோது இன்னும்.. இன்றைக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள் அதில் இவரைப் போல ஒரு மாமனிதர்கள் சேவையுடன் நடமாடிக் கொண்டுள்ளார்கள் என்று தோன்றியது.
அவரது அனுமதியுடன் மெயில், செல்பேசி எண், வாட்ஸ்அப் ஆகியவற்றை இங்கே வெளியிட்டுள்ளோம்.

acudrravi@gmail.com,
Ph : 93676 22256

கடலூர், பாண்டி,  சென்னையில் சந்திக்கலாம்.
–  குணா