வ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான மூலிகை துளசி. இது தெய்வவீக மூலிகை மட்டுமல்ல காற்றில் உள்ள கரியமில வாயுவின் அளவைக் குறைக்கும் அற்புதமான மூலிகையும்கூட.துளசி வளர்க்கத் தேவையானவை சிறிய தொட்டி, ஓரமான ஓர் இடம். வீட்டின் ஜன்னல் பகுதி கூடப் போதுமானது. விதை, கன்று மூலமாக வளர்க்கலாம். சூரிய ஒளி நேரடியாகப் படாமல் அளவாகப்படும் இடத்தில் துளசிச் செடியை வளர்க்க வேண்டும்.
 
பயன்கள்: ஜலதோஷம், காய்ச்சல், இருமல் போன்ற பல்வேறு பருவகால நோய்களுக்குத் தீர்வு துளசி. தினமும் காலையில் நான்கு அல்லது ஐந்து துளசி இலைகளை அப்படியே மென்றுவரலாம். இதன் இலையில் சாறெடுத்து இஞ்சிச்சாறு, தேன் கலந்து கொடுத்தால் நெஞ்சு கபம் காணாமல் போய் விடும். துளசி, ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. மன இறுக்கத்தைக் குறைக்கிறது. அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் துளசி, ஓசோன் படலத்தைப் பாதுகாப்பதிலும் உதவுகிறது.