ந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் வசிப்போருக்குத் தோலில் தோன்றும் நோய்களுள் ‘ஃபங்கஸ்’ (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம்.மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.தேமல், படர்தாமரை பரவுவதை தடுக்க முடியும்.

* சுயச் சுத்தம் மிக முக்கியம்.தினமும் இரண்டு முறை சோப்பு போட்டுக் குளிக்க வேண்டியது அவசியம்.

* முதல் நாள் உடுத்திய உடைகளைச் சோப்பு போட்டுத் துவைத்து, வெயிலில் உலர வைத்து, இஸ்திரி போட்டு மறுபடியும் உடுத்த வேண்டும்.

* எக்காரணத்தைக் கொண்டும் அடுத்தவர் உடுத்திய உடைகளை உடுத்தக்கூடாது.

* அடுத்தவரின் சோப்பு, சீப்பு, ஷாம்பு, கைக்குட்டை போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது

* இறுக்கமான கால் சட்டைகள், உள்ளாடைகளை அணியக்கூடாது.

* பருத்தித் துணியாலான ஆடைகளே நல்லது.

* வியர்வையை விரைவில் வெளியேற்ற முடியாத செயற்கை இழைகளால் ஆன ஆடைகளை அணியக்கூடாது.

* மழையில் நனைந்துவிட்டு வீட்டுக்கு வந்ததும், நனைந்த ஆடைகளை உடனே களைந்துவிட்டு, உடலைச் சுத்தமாகத் துடைத்துவிட வேண்டும். அதிக ஈரத்துடன் ரொம்ப நேரம் இருக்கக்கூடாது.

* இறுக்கமான காலணிகள்/காலுறைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

* கம்பளியில் தயாரிக்கப்பட்ட உடைகள், காலணிகளைத் தேவையில்லாமல் அணிய வேண்டாம்.

* அசுத்தமான இடங்களில் குழந்தைகளை விளையாடவிடக்கூடாது.

* நீரிழிவு நோயாளிகள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவை எப்போதும் சரியான அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

* கை, கால் விரல் இடுக்குகளில் அதிகம் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

* காளான் படை உள்ளவர்களைத் தொட்டுப் பழகுவதும் நெருங்கிப் பழகுவதும் கூடாது.

– டாக்டர் கு.கணேசன், பொது நல மருத்துவர்.