
கலைமாமணி டாக்டர் எஸ்.அமுதகுமார்,
MBBS,MCIP,PG.Dip.Diabetology,F.C.G.P
பாக்டீரியா(Bacteria) நாம் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.இந்த வார்த்தை மக்களுக்கு ஒருபுறம் பயத்தையும் கோபத்தையும் உருவாக்குகிறது. கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாக்கிருமி மனிதர்களுக்கு நோயை உண்டாக்குகிறது என் பதனால் பயம் ஏற்படுகிறது.இந்த கெட்ட கிருமியை நவீன விஞ் ஞானத்தால் உலகத்தைவிட்டு ஒழிக்க முடியவில்லை.
நுண்ணுயிர்கள் (Microbe) என்று சொல்லப்படும் பாக்டீரியாக்கள் இந்த உலகம் முழுவதும் வாழ்கின்றன. இவைகளில் நல்லது செய்யும் பாக்டீரியாக்களும் இருக்கின்றன.இவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவ நமது கைகள் ஒரு பாலமாக இருக்கின்றன. பாக்டீரியாக்களை மைக்ரோஸ்கோப் மூலமாகவே பார்க்க முடியும்.
பொருட்களைத் தொடுவதன் மூலம் மனிதனுடைய கைகளுக்கு அழையாத விருந்தாளியாக வந்துவிடும் பாக்டீரி யாக்கள், மாதக்கணக்கில் மனிதர்களின் கைகளில் தங்கிவிடும். நாம் கைகளைத்தான் எல்லா வேலைகளுக்கும் பயன்படுத்துகிறோம். கைகளால் உணவு தயாரிக்கிறோம்.அதை பலர் சாப்பிடுகிறார்கள். அப்போது ஒருவர் கையில் இருக்கும் பாக்டீரி யாக்கள், பலரது உடலுக்குள் பயணப்படுகிறது. பாக்டீரியாக்கள் கைகளில் தங்குவதற்கு, அந்தக் கைகளின் உஷ்ண நிலை, ஈரப்பதம், காரத்தன்மை, அமிலத்தன்மை ஆகியவை ஒத்துப்போகிறது.

சரியாகக் கழுவாத கைகளில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் தங்கியிருக்கும்.குளிர்ந்த நீரில் கைகளைக் கழுவினால் தூசியும், அழுக்கும், சிறிதளவு பாக்டீரியாக்களும் தான் கையை விட்டு போகுமே தவிர, பெரும்பாலான பாக்டீரியாக்கள் கையை விட்டு அகலாது.சோப்பை உபயோகித்து கைகளை நன்கு கழுவுவதால்,வேறு இடத்திலிருந்து நமது கைகளில் வந்து ஒட்டிக்கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் வெளியேற்றப்படும். சோப்பை உபயோகித்து கழுவும்போது கைகளிலுள்ள அமிலத்தன்மை, சோப்பினால் மாறுபடாது.
கிருமி நாசினியை (Sanitizer) உபயோகித்து கைகளை நன்கு கழுவினால், கைகளிலுள்ள பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படும்.மேலும் அதிக அளவு பாக்டீரியாக்கள் கைகளை விட்டு போய்விடும்.
நாம் அனைத்து வேலைகளையும் கைகளைக் கொண்டே செய்கிறோம்.அதனால் கைகள் அழுக்காகும் போது நகங்களிலும் அழுக்கு படிகின்றது. கைகளை அடிக்கடி சுத்தம் செய்கிறோம்.முறையாக நகங்களையும் வெட்டி சுத்தம் செய்யாவிட்டால் ஏகப்பட்ட பாக்டீரியாக்கள் அதில் சேர்ந்து,வாழ்ந்து ஆரோக்கியத்திற்கு உலை வைத்து விடும்.அழுக்கோடு உள்ள நகங்களுடன் தினமும் உணவு சாப்பிடுவது என்பது கொடிய விஷத்தை சாப்பிடுவதற்குச் சமம்.
நகங்கள் மனித உடலின் ஆரோக்கியத்தை காட்டும் கண்ணாடியாக திகழ்கிறது.அதன் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் நகங்களின் வடிவமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்,உடலில் ஏற் பட்டிருக்கும் நோய்களின் அறிகுறியாக கருதப்படுகிறது.கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு,ரத்த சோகை, சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட்டிருந்தால் அது நகங்களில் பிரதிபலிக்கும்.அதை வைத்தும், சில பரிசோதனைகளை செய்தும், உடலில் எந்த இடத்தில், என்ன நோய் இருக்கிறது என்பதை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். நகம் வளரும் வேகத்தை வைத்தும் நோய்களை கண்டறிந்துவிட முடியும்.
உங்கள் நகத்தின் தோற்றத்தில்,நிறத்தில் மாறுபாடு ஏற்பட்டால் சரும நோய் நிபுணரை (Skin Specialist) சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அது ஒன்றும் இல்லாததாகவும் இருக்கலாம்.உடலி னுள்ளே இருக்கும் நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
நகங்களில் கீறல்,பிளவு, வெடிப்பு முதலியவை ஏற்பட்டால் பூஞ்சை காளான் தொற்று காரணமாகும். அதிக நீளம் உள்ள நகங்களுக்குள் அதிக அழுக்கும் கிரிமிகளும் சேர் வாய்ப்பு உள்ளது.ஆகவே விரல் நகங்களை பெரிதாக வளர விடக்கூடாது.ஒருவருக்கு நகங்களை வெட்டிய பின்பு அந்த நகவெட்டியை நன்கு வெந்நீரில் கழுவி, சுத்தமாக துடைத்து விட்டே அடுத்தவர்கள் பயன்படுத்த வேண்டும்.அப்படி செய்யாவிட்டால் தொற்றுநோய் கிருமி ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு பரவ வாய்ப்பு உண்டு.
பெண்கள் தான் வீட்டில் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.அதனால் பெண்களின் நகங்களுக்குள்தான் கிருமிகள் அதிகமாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால்,ஆராய்ச்சிப் படி பெண்களைவிட, ஆண்களின் நகங்களுக்குள்தான் கிருமிகள் அதிகமாக இருக்கிறதாம்.
பெண்களில் நிறைய பேர் நகம் கடிக்கிறார்கள். நகங்களை கடிப்பது நகங்களுக்கும் நல்லதல்ல, நகத்தை கடிப்பவரின் ஆரோக்கி யத்திற்கும் நல்லதல்ல.

