ருத்துவர் மூன்று அம்சங்களால் தீர்மானிக்கப்படுகிறார். அவை, அவரின் திறமை, எளிதில் அணுகக்கூடியவராக இருத்தல் மற்றும் இணக்கமான மனநிலையுடன் இருத்தல்.  நல்ல மருத்துவரைத் தேடுவதைவிட நமக்குச் சரியான மருத்துவத்தை வழங்குபவர் யார் என்பதை நாம் இனம் காண வேண்டும்.

சரியான மருத்துவர் என்பவர் யார்.‌‌அவர் எப்படி இருப்பார்?

* மரியாதையுடனும், கண்ணியத்துடனும் உங்களுக்கு அவர் சிகிச்சை அளிப்பார்.

* உங்களை அன்புடன் வரவேற்பார்.

* அறிகுறிகளுக்கு மட்டுமல்லாது நோய்க்கான முழுமையான சிகிச்சை அளிப்பவராக இருப்பார்.
* பாதிக்கப்பட்டவர்களின் திறமைகளையும் புரிந்துகொள்வார்.

* உங்கள் நலனில் அக்கறை கொண்டு, தனக்குச் சமமானவராக உங்களை நடத்துவார்.
* உங்களால் வாங்கக்கூடிய விலையில் மட்டுமே மருந்துகளை பரிந்துரைப்பார்.
* அவருக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் உங்களுக்கு உடல் நலக்குறைவு என்றால் தவிர்க்காமல் நேரம் ஒதுக்கி ஆலோசனை சொல்வார்.
* தேவைப்பட்டால் உங்களை தகுதியான சிறப்பு மருத்துவரைப் பார்க்க பரிந்துரைப்பார்.
* சொல்வதை கவனமுடன் கேட்டு, உண்மை விவரங்களை தெரிவித்து, நோய், உடல் நலம் பற்றிய பல கேள்விகள் கேட்டு, உங்களின் கேள்விகளுக்கும் பதில் சொல்பவராகவும் இருப்பார்.
* தொண்டு நிறுவனங்கள்,சுய உதவிகுழுக்களை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
* போதுமான நேரத்தை உங்களுடன் செலவிடுவார்.
* எப்போதும் நம்பிக்கை தந்து ஊக்கம் தருபவராக இருப்பார்.