
மனநல சிகிச்சைக்கு மருத்துவர்கள் உதவி தேவை.இந்தத் துறையில் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்… என்று இரண்டு வகையான நிபுணர்கள் உள்ளனர்.
இவர்களின் சேவைகள் எப்படிப்பட்டது…?
மனநல மருத்துவர் (Psychiatrist) என்பவர் ஆங்கில மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்று, மனப்பிறழ்வுகளுக்குச் சிகிச்சை அளிக்கச் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்.
கடுமையான மனப்பிறழ்வுகளை நோயுறுதி செய்வதும் அதற்கான சிகிச்சை அளிப்பதுமே மனநல மருத்துவர்களின் சிறப்புத் திறன்கள் ஆகும்.இவர்கள் முக்கியமாக மருந்துகளையும் மின்தூண்டல் சிகிச்சையையும் தேவைக்கேற்ப ‘கலந்தாலோசனை’ சிகிச்சைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
மனநல ஆலோசகர் என்பவர் உளவியல் படிப்பில் டாக்டர் பட்டம்(Psychologist) அல்லது மனநல ஆலோசனை படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவராக இருப்பார்.உளவியலாளர்கள் ‘கலந்தாலோசனை’
(Counselling) சிகிச்சையை மட்டுமே பயன்படுத்து கிறார்கள்.மனநல சிகிச்சைக்கு சைக்கோ தெரபிஸ்ட்டுகளின் பங்களிப்பும் முக்கியம்.
-பழ.குணசேகரன். ஹெல்த் அண்ட் பியூட்டி.

