
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும்.நெஞ்சம் நிறைந்த காதலில் கலந்து உருக வேண்டும்.தம்பதியர் தங்கள் பிஸியான வாழ்க்கையில் நெருக்கத்துக்கு இடம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அவசரமாக முத்தம் கொடுப்பதோ,மூளையில் வேறு ஏதோ ஓடிக்கொண்டிருக்க,இங்கே கட்டித் தழுவுவதோ நெருக்கத்தைக் கொடுக்காது.
ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் ‘நெருக்கமான மாலைப்பொழுது’ வேண்டும்.குழந்தைகள்,நண்பர்கள் யாருமின்றி,வேறு எதுவுமின்றி தம்பதியர் ஒருவரைப் பற்றி ஒருவர் புரிந்து, பேசி, செவிமடுத்து, இன்பத்தில் மூழ்கி, மகிழ்ச்சியில் திளைக்க வேண்டும்.இந்த நெருக்கமான மாலைப்பொழுது மிகவும் ‘காஸ்ட்லி’யாக, செலவுமிக்கதாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை என்பதுதான் இங்கே மிக நல்ல விஷயம்.கடற்கரையில் வேர்க்கடலை சாப்பிடலாம்.,நீண்ட தூரம் நடக்கலாம்,சிரித்து பேசலாம்.
திரைப்படம் பார்த்து ரசிக்கலாம்.தம்பதியர் நெருக்கமாக இருந்தால் ஆக்சிடோசின் ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.இதனால் கவலைகள் மறையும்.மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்.இருவரும் நெருக்கமாகி உச்சத்தை அடைவார்கள்.அந்த குடும்பமே குதூகலமாக இருக்கும்.
இல்லற வாழ்வில் மகிழ்ந்து வாழ்வில் உச்சத்தை அடைவார்கள்.
-டாக்டர் டி.காமராஜ், பாலியல் நிபுணர்.சென்னை

