பெண்கள் புடவை கட்டினால் புற்றுநோய் வரலாம் என்று சமீபத்தில் வாட்ஸ் அப்பில் படித்தேன்.எல்லா பெண்களும் புடவை தான் கட்டுகிறார்கள்.அதனால் எப்படி நோய் வரும்?

-கே.புஷ்பலதா, இராமநாதபுரம்.

வாட்ஸ் அப்பில் வரும் எல்லா தகவல்களையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.அதே நேரத்தில் இந்த செய்தியில் கொஞ்சம் உண்மை உள்ளது.

புடவை கட்டும் எல்லா பெண்களுக்கும் புடவையினால் புற்றுநோய் வராது. பெண்கள் உடுத்தும் உடை உடலுக்கு தொந்தரவு செய்வதாக அமைந்தால்,நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

உடலில் ஒரு பகுதி தொடர்ச்சியாக உராய்தலுக்கு உள்ளாகும் போதும், அதனால் புண்ணாகும்போதும்,அது ஆறுவதற்கு நீண்ட காலமாகும் ஆகும் போது,அது பின்னாளில் புற்றுநோயாக மாற வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் புடவை, பாவாடை,சல்வார் போன்றவற்றை இடுப்பைச் சுற்றி தொடர்ந்து இறுக்கமாக கட்டும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

இடுப்பை சுற்றி கட்டும் போது தினமும் ஒரே இடத்தில் பல மணி நேரம் இறுக்கமாக கட்டக்கூடாது.சற்று தளர்வாக கட்டலாம்.சருமத்தின் தன்மையில்,நிறத்தில் ஏதேனும் மாற்றங்களைப் பார்த்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.அரிப்ப,புண் என எந்த அறிகுறி இருந்தாலும் அலட்சியப்படுத்தக் கூடாது.