ங்களுக்கு ஓய்வான நேரம் கிடைக்கும்போதெல்லாம், இயற்கையை ரசிக்க பழகுங்கள்.செல்போனில் பொழுதுபோக்கு வேண்டாம்.தோட்டங்கள், வனங்கள், மலைகள், நதிகள், ஏரிகள் போன்ற இயற்கைக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய சில இடங்களுக்குச் செல்லுங்கள்.திறந்த வானத்தின் கீழ் தூய்மையான காற்றை சுவாசித்து, பறவைகளில் கீச்சுக் குரலையும், காற்றின் ஓசையையும் கேட்டு ரசிக்கலாம். கதிரவனின் குணப்படுத்தும் கதிர்களை உங்கள் உடலில் படச் செய்யலாம். இயற்கையோடு நெருங்கி ரசித்து மகிழ்ந்தால் உங்கள் மனதிற்கு மிகவும் புத்துணர்ச்சி கிடைக்கும்.  சுவாசம் மேம்படும்.மன அழுத்தம் குறையும்.அவ்வப்போது தலை தூக்கும் விரக்தி எட்டிப் பார்க்காது.