
– டாக்டர்.ஜி.ராஜமோகன்.
இன்றைய வாழ்வியல் முறையில் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகிறவர்களாக இருக்கிறார்கள்.அதனால் கருத்து வேறுபாடு ஏற்படுவது வாடிக்கை.
பெற்றோருக்கு ஏற்படும் உரசல்கள் குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கின்றன.
பெற்றோர்கள் தங்கள் சண்டையை வெளியே சொல்லவில்லையென்றாலும் அவர்களது நடவடிக்கைகள், உடலசைவுகள், முகத்தோற்றங்களை வைத்துக் குழந்தைகள் அதை யூகித்துவிடுவார்கள்.அதனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் எந்த ஒரு சிக்கலையும் நீடிக்க விடாமல் அதற்கான தீர்வைத் தேடி உடனடியாக அதை சரி செய்வது அவசியமானது.
இரண்டு பேரும் வேலைக்குப் போகக்கூடிய சூழல் உள்ள குடும்பங்களில் இது போன்ற மனவுளைச்சல்கள் அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும்போது அதை முடிந்தவரை குழந்தைகளிடம் காட்டாமல் இயல்பாக நடந்து கொள்வதும், அப்படி ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கும்போது இன்னொருவர் அக்கறையுடனும், கரிசனத்துடனும் அருகே இருந்து பார்த்துக்கொள்வது, குழந்தையின் மனநிலையில் நேர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.
அப்பா அம்மா தொடர்ந்து சண்டை போட்டால் பிள்ளைகள் பாவம்.அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். நமது குழந்தைகளுக்கு அப்படி ஒரு நெருக்கடியை தர வேண்டாம்.

