லக சுகாதார நிறுவனம் (World Health Organisation) நடத்திய ஓர் ஆய்வின் முடிவில், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் உடல் நலக் குறைபாட்டால் பெற்றோருக்கு முன்னர் இறக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.இதைத் தவிர்க்க, மருத்துவமனைகள் தேவையில்லை.விளையாட்டு மைதானங்கள்தான் இன்றைய முக்கிய தேவையாக உள்ளது.அதிலும், குறிப்பாக, உள்ளரங்கு விளையாட்டுத் திடல்கள்தான் அதிகளவில் தேவைப்படுகின்றன.

பள்ளிக்குச் செல்லுங்கள், டியூஷனுக்குப் போங்கள் எனக் குழந்தைகளை அறிவுறுத்துவதுபோல், ‘மாலை நேரங்களில் விளையாட செல்லுங்கள்’ எனவும் சொல்லித்தர வேண்டும்.இன்றைய இளைய தலை முறையினர், மணிக்கணக்கில் செல்போனில் கேம் விளையாடுகின்றனர்.

ஒரே இடத்தில் பல மணி நேரம்  ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து இருக்கிறார்கள்.இது நல்லதல்ல.

ஓடி ஆடி விளையாட வேண்டும்.இதனால் உற்சாகம் கிடைக்கும்.உடல்வலுவடையும்.நன்றாகப் பசி எடுக்கும்.படிப்பில் படு சுட்டியாக விளங்குவார்கள்.